
இளமைப் புதிரே
நில்
உன்னோடு ஒரு வார்த்தை
நீயும்
காஷாயத்துணி
காந்திக்குல்லாய்
அணிந்துபோவோர் வழிதானோ?
நீ செய்வதெல்லாம்
முந்தையத் தலைமுறையின் குரூரங்களை
தாளமுடியாத சலிப்பின்
வெளிப்பாடா?
அல்லது உந்தன் பலஹீனங்களுக்கு
முகமூடியா?
உன் ரோமச் ()ெசரிவு
புதுப் பாலுக்குக் காவலானால்
அதுசரி
பழைய பூனைக்கே தோழனானால்
பிறக்கும்
பேரனின்
கையில்
கத்தரிக்
கோல்
‘கணையாழி’ அக்டோபர் 1973
