
உண்மை சொரூபத்தில்
உயிருள்ளவையாய்
உணர்வுகளை உலவ விடத்தான்
ஆசை
ஆனால்
குரலின் வெறுங்கோடுகள்
காற்றுச் சிற்பமாய்
செவித்திரைச் சித்திரமாய்
நகலாய் மாறி
நகைக்கின்றன
குரல் பிடித்த பிள்ளையார்
செவிக்குழிக்குள்
குரங்காகிக் குதிப்பதை
எதிர்வினைக் கண்ணாடி காட்டுகிறது.
அறிவு வெளிச்சத்தின் வீச்சில்
மனத்தின் நிழல்களாய் மட்டும்
வார்த்தைகள் விழுகின்றன.
நிஜத்தின் வடிவங்கள்
தன் தன் கவனிப்பின்
உக்ரவக்ரங்களின் அடைப்புக்குள்
கற்பித்துக் கொண்ட
மூளிகளின் வாஸ்த்தவங்களே
நீயும் நானும்
அசலை
முழுமையாய் அறிய –
‘வாசகன்’ ஏப்ரல் 1974
