
இழையகலம்
ஒருக்களித்து
அரைகுறையாய்
முழுதாக திறந்த
சும்மா
கொக்கியிட்டு
தாழ்ப்பாள் போட்டு
ரகஸியப் பூட்டுடன் மூடிய
வெறும் பலகையாய்
வேவுக்கண் பதித்து
ஒன்றாய்
இரண்டாய் கதவுகள்
தடுப்புகள்
எதுவும்
உறுதியில்லை
ஊகம்தான்
பல நிறங்களில்
பல டிஸைன்களில்
அலைநிற்கும் படிப்பில்
இழுத்துவிட்ட விறைப்பில்
வழிந்திறங்கிய
குறுகிச்சுருங்கிய திரைகள்
முகமூடிகள்
சூழ்நிலைக் காற்றில்
ஒன்றுபோல் ஒன்று
தன்னைத் தவிர்த்து
மற்றத் திரைகளை
கேலி செய்தசைந்து
கிசுகிசுக்கும் – விமரிஸனங்கள்
கணையாழி’ டிசம்பர் 1975
