தி.சோ.வேணுகோபாலன்/முடிவற்ற சங்கிலியின் சில இணைப்புக்கள்

உள்ளத்தில் தீக்குச்சி
விருட்டென்றுரசிய
ஒரு மடப் பொழுதில்

கல்லடிபட்ட காக்காய்
காலொடிந்து கதறியது

வேரறுந்த செடி
வீதிக்குப் பறந்தது

புத்தூருக்குக் காகம்
போயிற்றோ இல்லையோ
நடமாடும் புதைகுழிக்குள்
செடிக்குச் சவ அடக்கம்