தி.சோ.வேணுகோபாலன்/எந்தக் குறியை நோக்கி ?…

மைல்கல் அழகில்
மயங்கி நின்றதுண்டு
காலடியில் நீள்வீதி
ஓடும் முடிவற்று
கத்தியாய், மைல்கல்
தலைசீவச் சீவ
சூரபத்மனாய்
புதுத்தலைகள் மாட்டிவரும்
மைல்கல் மயக்கம்
மங்கி மறைகையில்
காலடியில் நீள்வீதி
நிற்கும் முடிவற்று
அடிமேல் அடியாய்
அளக்கும் கால்கள்