தி.சோ.வேணுகோபாலன்/முழுமைப் பார்வை

தசரதத்தில் ராவணத் தலைகள்
திசைக்கொன்றாய்த் திரியும்
இருக்கின்ற இதயம் ஒன்றும்
துண்டாகித் தலைக்கொன்றாக
துணைபோகும்
ஒவ்வொரு திசையும் எதிர்மறைகள்
கோளத்தின் நீட்சி
வட்டம் இடவலம்
சாய் வட்டம்
நேர்கோடு
ஆகாசக்கண் யாருக்குண்டு

(‘விஸ்வரூபம்’ மார்ச் 1977)