
தமிழில் : க மோகனரங்கன்
நான் கொல்லப்படும் நாளில்,
என்னைக் கொல்பவன்
என்னுடைய பையிலிருந்து
பயணச் சீட்டுகளைக்
கண்டுடெடுப்பான்.
ஒன்று, அமைதிக்கு
ஒன்று,வயல்வெளிகளுக்கும் மழைக்கும்
மற்றுமொன்று,மனிதகுலத்தின் மனசாட்சிக்கு.
என் கொலையாளியே,
போகாமல் தங்கியிருந்து
அவற்றை வீணாக்கிவிடாதே!
உன்னைக் வேண்டி
விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்,
அச்சீட்டுகளைப் பயன்படுத்தி
பயணம் சென்று வா.
