தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கடையநல்லூர் வெங்கட்ராமன் (நன்றி ஸ்வராஜ்யா)

திருமதி MS சுப்புலெட்சுமிக்கு நிறைய அன்னமாச்சார்யா கீர்த்தனங்களை அளித்தவர். அவர் இசையமைத்து MS பாடிய ராஜாஜி பாடல், ராகமாலிகாவில் அமைந்த குறையொன்றும் இல்லை' பாடப்படாத இசைமேடை இல்லை எனலாம். வெங்கட்ராமன் சென்னை வானொலி நிலையத்தில் இசை வித்வானாக இருந்தவர். தம்பூரா வாசிப்பதில் வல்லுநர். பெரும்பாலான MS கச்சேரிகளில் அவருக்கு தம்பூரா வாசித்தவர்.pitch and precision என்றால் கடையநல்லூர் தான்’ என்கிற அளவில் பெயர் பெற்றவர். `பாவயாமி கோபால பாலம் ‘ கடையநல்லூர் tune தான். MS பாடி வெளிவந்த ஹனுமான் சாலிசா, கணேச பஞ்சரத்னம், மீனாட்சி பஞ்சரத்னம் இவற்றிற்கெல்லாம் இசை வெங்கட்ராமன் தான்.

தன்னை வெளிக்காட்டாமலேயே உடற்குறையுடைய மகனிற்காக சென்னை இசபெல்லா மருத்துவமனை வாயிலில் PCO நடத்தி ஏழ்மையில் வாழ்ந்த கடையநல்லூர் வெங்கட்ராமன் என்ற அற்புத இசைக்கலைஞன் 2004 இல் பிப்ரவரி மாதம் மறைந்தார்.