மோகன்ஜி/’கூளம்’

‘கூளம்’ கதை குறித்த ஒரு அறிமுகம்:-
நலம் தானே! ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் என்னிடம் 96 கதையைஅனுப்பக் கேட்டபோது எழுத்தாளர் விக்கிரமன் சாச் அவர்களிடம் ‘அமுத சுரபி’ இதழுக்காய் நான் தந்த இந்தக் கனத் நினைவுக்கு வந்தது. இதை எழுதி இருபத்து மூன்று வருடங்களாகி விட்டன. அமரர் விக்கிரமன் அவர்களிடம் எனக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. ஒரு சந்திப்பின்போது எனது கதையொன்றை தரத் சொன்னார். இணைத்துள்ளக் கதையை தந்தேன். கதைக்கு ‘பேப்பர் ரோஸ்ட்’ என்று தலைப்பு வைத்திருந்தேன். கதை மிக நன்றாத் இருப்பதாகப் பாராட்டினார். தலைப்பை மட்டும் ‘கூளம்’ என்றோ ‘பழையன கழிதலும்’ என்றோ மாற்றிக்கொள்வதாயும் சொன்னார் ‘கூளம்’ நல்லா இருக்கு சார்! என்றேன்.
அந்த சமயம், தமிழ்நாட்டை விட்டு நான் ஆந்திராவின் மூலைக்கு மாற்றலாகி இருந்த நேரம்.. அந்தக் கதை வெளிவந்த விவரமோ, இதழோ, எதுவும் என்னிடமில்லை. கதைக்கு நான் வைத்த ‘பேப்பர் ரோஸ்ட் என்ற பெயர் ஏன் வேண்டாமென்று அவர் சொன்னார் என்பது, நீங்கள் கதையை முடிக்கும்போது உணர்வீர்கள்
விக்கிரமன் சார் எளிமையானமனிதர். நான் சந்தித்த இனிமையான ஆளுமைகளில் முக்கியமானவர். அவரை பற்றி ஒரு அனுபவப் பகிர்வை ‘வானவில் மனிதனில்’ எழுதத் தூண்டிய ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி!
இனி கூளம் சிறுகதை!

கூளம்
மதுரம் காலையிலேயே சபேசனை பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டாள்.
‘இன்னும் நாற்பதே நாள்.. நம்ப அம்பி அமெரிக்காவுலேயிருந்து கு டும்பத்தோட இங்க வந்துடுவான். அவன் எத்தனை சாமான் செட்டோட வருவானோ? காலம்காலமா சேத்து வச்சிருக்கேளே, பொட்டி பொட்டியா புஸ்தகமும் காகிதமுமா …கூளம்.. கூளம்… இதையெல்லாம் உடனடியா காலி பண்ற வழியைப் பாருங்கோ. சோல்லிட்டேன்… இண்டு இடுக்குவிடாம அப்படி என்னத்தைதான் திணிச்சு வைப்பேளோ? மாத்தலான ஒவ்வொரு ஊருக்கும் உங் களோட இந்த பொக்கிஷத்தைக் கடத்தறத்துக்குள்ள எனக்கு உயிர் போய் உயிர்வரும்.. ரிட்டையர் தான் ஆயாச்சே? இன்னுமென்ன இருக்கு இதையெல்லாம் தலைலே கட்டி எடுத்துகிட்டா போகப் போறோம்?”
“ஏன்? ஒண்ணு பண்ணேன்… நான் போயிட்டா கட்டை, வரட்டி வா ங்க வேண்டாம். என்மேல இதையெல்லாம் குமிச்சு என்னை கரையேத்திடேன்”
“கா லங்காத்தால நல்ல வார்த்தை வாயில வருதா? வயசானா ஒரு இதம் வேண்டாம்? உங்கச் செல்ல மருமக போன விசை வந்தப்போ சொன்னாளே…’மாமாவுக்கு ஒரு கல்யாண மண்டப ஹால் கூட பத்தாதும்மா!’ ன்னு… என்னத்தையோ பண்ணுங்கோ.. எனக்கென்ன? ரயிலடிக்காவது வண்டி ஏத்திவிட வருவேளா ? இல்லே நானே போவா?”
“வ ந்துத் தொலயறேன்.. நீ உன் மூட்டையக் கட்டிகிட்டு கிளம்பு.. மன்னி தந்த சீதனம்னு வத்தலும் ஊறுகாயும் வாரிக்கிட்டு வர ண்டாம். ஏற்கெனவே உனக்கு பி.பி எகிறிக் கிடக்கு”
மதுரம் அப்படி எங்கு போகப் போகிறாள்?… தன் அண்ணன் வீட்டுக்கு மூணுநாள் போய் வருவதற்குள் இந்த ஆராட்டம்..
ஸ்டேஷனுக்கு போகும்போது மதுரம் சமாதானமாகி விட்டாள்.
“டிக்கெட், பணமெல்லாம் எடுத்துகிட்டியோன்னோ?”
எழும்பூர் ரயிலடியிலிருந்து திரும்பும்போது பஸ்ஸில் மருமகளின் அங்கலா ய்ப்பாய் மதுரம் சொன்னதுதான் சபேசன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. பிள்ளை வாங்கிக் கொடுத்த வீடுதான். மூன்று ரூமிலும் அலமாரிகள், லாப்ட்டுகள், கட்டிலின் கீழ் என்று அட்டைப் பெட்டி, கள்ளிப்பெட்டி என்று கட்டுக்கட்டாய் காகிதங்கள் பைல்கள், புத்தகங்கள். லேசில் ஒரு கடுதாசியை சபேசன் தூக்கி எறிந்துவிடமாட்டார்.
‘மதுரம் சொல்வதும் உண்மை தானே? எதற்காக இவற்றையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறேன்? இவற்றை வைத்துக் கொண்டு என்னதான் செய்யப் போகிறேன்? வீட்டுக்கு போனதும் பழசையெல்லாம் ஒழிக்க வேண்டியதுதான். வேறு ஒன்றும் தலை போகிற வேலையில்லை. செய்துவிட வேண்டியது தான்’ பரபரவென்று தீர்மானமாய் மனசில் பட்டுவிட்டது. சட்டென்று ஒரு விரக்தியும் விடுபடலும் உணர்ந்தார்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒரு முறை சுற்றிலும் நோட்டம் விட்டார். உண்மைதான். ஒரு கொடோனாகத்தான் வீட்டை அடித்து விட்டிருக்கிறோமென்று பட்டது. அப்புறமாய்ப் பார்த்துச் கொள்ளலாம் எனும் நினைப்பு எழுமுன்னர் வேலையைத் தொடங்கிவிட வேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. அதே சுருக்கில் வடக்குக்கோடி அறை லாப்டில் இருந்த அட்டை டப்பாக்களை ஸ்டூல் மேலேறி நின்றுகொண்டு கீழே இறக்கினார். பெரிய பெட்டிகள் சிலவும் இருந்தன. பால்கனிக்கு வந்து வாட்ச்மேனை கூப்பிட்டார்.
அவன் உதவியோடு பெட்டிகளனைத்தையும் இறக்கியாயிற்று பெட்டிகளை அரைவட்டமாய் தள்ளிவைத்து, கத்தி கத்திரிக்கோலுடன் நடுவில் அமர்ந்தார்.
முதல் பெட்டியைப் பிரித்தார். இரண்டு கட்டுகளாய் தன் குழந்தைகளின் பள்ளிக்கூட பிராகிராஸ்கார்டுகள். அம்பி எனும் விக்னேஷ் எப்போதும் முதல் ராங்க் தான் ! இது உமாவின் கார்டு அல்லவா? எட்டாங்கிளாஸ் ‘ஏ’ பிரிவு. காலாண்டில் இருபத்தியெட்டாம் ராங்க். கணக்கில் நாற்பத்தியொன்று… கழுதை.. ‘லேசில் படிக்க உட்காருவாளா என்ன ? ஆனாலும் ரேங்க் கார்டில் கையெழுத்த வாங்கு முன் அவள் போடும் நாடகம் இருக்கிறதே!
தன் விரல்களில் சொடுக்கெடுத்து, அன்று மட்டும் சபேசன் குளிப்பதற்கு வெந்நீர் விளாவி; நீயேன் கண்ணு இதெல்லாம் செய்யிறே என்று கேட்டால், ‘என் செல்ல அப்பாவுக்கு நான் செய்யாமல் வேற யார் இதெல்லாம் செய்வாங்க’ என்று புஜத்தைக் கட்டிக் கொள்வதும் ஆபீஸ் செல்வதற்கு செருப்பை மாட்டிக் கொள்ளும் சமயம் ‘அப்பா என்று கீழ்க்குரலில் குழைந்து பிராகிராஸ்கார்டை கையெழுத்து வாங்க நீட்டுவதும்…
என் அருமை மகளே ! நீயேன் பெரியவளானாய்? ஏன் என்னை விட்டு எங்கோ பிறந்த ஒருவனுக்காய் நாடு விட்டு நாடு போய் ச மைத்துப் போட்டு, குழந்தைகள் பெற்றுக் கொண்டு.. இங்கே வரும் சமயமெல்லாம் அவர்களைப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டு…. இங்கக் கிழவனுக்காய் உனக்கு சற்றேனும் நேரமிருக்கிறதா உமா?’
ஒரு அட்டை ஃபைலில் இருந்து விழுந்த போட்டோவைக் கண்டபோது புன்னகை அரும்பியது… இது தானும், மதுரமும் பாணமான பத்து நாட்களில் எடுத்தது.. வாசன்ஸ்டூடியோ என்ற வில்லை கீழோரமாய்…
‘அம்மா ! சாரை நல்லா ஒட்டி நில்லுங்கம்மா”
மதுரத்துக்குத்தான் என்ன வெட்கமும் மருட்சியும் கண்களில்??
‘போறும், பொழுதுக்கும் புருஷனை ஒட்டிண்டு திரிய வேண்டாம்.. நர்து பேர் வரப்போக இருக்கிற வீடு.. ஏகாங்கி லோக ரட்சகான்னு ஓன்னு நிக்கிற குடும்பமில்லே இது..”
அம்மாவின் வார்த்தைச் சாட்டை இப்போதும் காதுகளில் வீறியது. மதுரா.. நிறையத்தான் பட்டுட்டே’
மனைவிக்கு தான் எதுவுமே செய்யவில்லையோ என்ற எண்ணமும், அது தந்த கழிவிரக்கமும் சபேசனுக்கு கடைவிழிகளில் கண்ணீராய் தகித்தது.
மிச்ச காலமேனும் உனக்கு அனுசரணையாய் இருப்பேன் மதுரா என்று மனசு அரற்ற, மீண்டும் காகித அடுக்குகளின் உட்கார்ந்தார்.
அடுத்த கள்ளிப்பெட்டியை தரையில் சாய்த்தார். அந்த மெலிந்திருந்த மஞ்சள் நிற ஃபைலை கண்டவுடன் சபேசனுக்கு சட்டென்று முதுகில் சொடுக்கி விட்டாற்போல் இருந்தது.. மெள்ள ஃபைலைத் திறந்தார்.
முதல் காகிதமே, ‘ஏன் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்ற அலுவலக மெமோ.
நிறுவனத்தின் சார்பில் சபேசன் இட்ட ஒரு ஒப்புதல் கையெழுத்தால் ஏ ற் பட்ட பத்தாயிரம் ரூபாய் நஷ்டத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை. தன்மேல் விசாரணை நடந்த ஆறுமாத காலம் தன் மனதில் பாறாங்கல்லாய்
விழுந்த மரண வேதனை. சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் எல்லோரும் தன்னைப் பார்த்து கைக்கொட்டி சிரிப்பது போல் குமைந்து தலைகவிழ்ந்து ஊர்ந்த நாட்கள்.
கையிலிருந்த மெமோ ஓரங்கள் மடங்கி, வேதனையின் சாசனமாய் சபேசனை மீண்டும் அந்த ரணகளத்தில் தள்ளியது. குற்ற உணர்வு பதைபதைப்பும் இருண்ட மேகமாய் சட்டென்று அவர் மேல் கவிந்தது. மறக்க முயன்றும் முடியாமல் அந்த நிகழ்வு இறுகி மனதின் ஆழத்தில் கசடாய்ப் படிந்திருந்தது. அந்தக் கசடைக் கிளறாதவரை துக்கமில்லை. கட்டையோடு தான் அந்தக் கசடும் கரையும்..
கடைசியில் அலுவலகம் அவரை மன்னித்து விட்டது. ‘பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது இப்படி கவனக் குறைவாக இருக்கலாமா?’ என்று அவருடைய உயரதிகாரி சாதாரணமாய்த்தான் சொன்னார். சபேசன்தான் தன்னையே மன்னித்துக் கொள்ளவில்லை. இனி பதவி உயர்வுக்கென முயல்வதில்லை என்ற வைராக்கியம் ஏற்பட்டு விட்டது. அலுவலகப் பொறுப்பில் தான் இருந்த நிலை யிலேயே சொச்ச காலத்தையும் தள்ளினார்.
எல்லாமும் படக்காட்சிபோல் சபேசனின் மூடியிருந்த கண்களிலாடின. இந்த மெமோவை என்ன செய்வது? தன் இடப்புறமாக இருத்திக்கொள்ளவேண்டி வைத்த சில தாள்களோடு அதை வைத்தார். எதற்கு இந்த வடுவை இன்னும் சுமக்க வேண்டும் ?
மெமோவை மீண்டும் கையிலெடுத்தார். இரண்டாய்க்கிழித்தார். நாலாய், பதினாறாய், நூறாய் உருத் தெரியாமல் அது துணுங்கிய வாயருகில் அந்தக் குப்பலைக் கொண்டு வந்து வாய்குவித்து வேகமால் ஊதினார். ஆனாலும் பலம் குன்றிய அந்த ஊதலில், அத் துணுக்குசன் பரவலாய் சிதறாமல், சபேசன் மடியிலேயே விழுந்தன. அவற்றை உதறித் தள்ளினார்.
படபடவென்று வந்தது. சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டார். எழுந்து போய் பனியன் நனைய மடமடவென்று தண்ணீரை வாயில் சரித்துக்கொண்டு மீண்டும் காகித அடுக்கல்கள் மத்திய அமர்ந்தார். இந்தக் காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பது போ நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
இந்த பெட்டியோடு, அடுத்த மூன்று பெட்டிகளிலும் அலுவலச் காகிதங்கள். மாதச்சம்பளக் குறிப்புகள், விடுப்பு விண்ணப்பங்களின் கார்பன் காப்பிகள், பயணப்படி காகித நகல்கள், இன்னமும் ஏதேதோதிருந்தன.
அந்த குப்பலிலிருந்து சில ‘ராமபாண’ பாச்சைகள் ஓடின. வடிவத்தைப் பார்த்து அப்படியொரு பேரை அதற்கு வைத்தவன் நல்ல ரசிகன் என்று எண்ணிக்கொண்டார்.
திறம்பழுத்து ஏறத்தாழ மக்கியிருந்த அந்தக் காகிதங்கள் கிழிக்க மெத்தென்று அவர் விரல்களின் இழுப்பிற்கு கிழிபட்டன. சபேசனுக்கு இந்த அழிப்பு நாடகத்தில் ஒரு உற்சாகமோ அல்லது வேவியோ உண்டாகி கட்டுக்கட்டாக காகிதங்களை துவம்சம் செய்யலானார்.
முப்பத்தெட்டாண்டு கால அலுவலக வரலாறு.. யாருக்கு வேண்டும்? வாங்கின சம்பளத்துக்கு பலமடங்கு உழைத்துக் கொட்டி, தின்ற உப்புக்கு பிரதி செய்தாகிவிட்டது
இது வரை ஏழெட்டு அட்டைப்பெட்டிகளில் இருந்தவை மோட்சம் உருந்தன. இன்னமும் நிறைய இருக்கிறது. மனது மீண்டும் மாறி இன்னும் இந்தக் காகித சிலுவையை சுமக்க யத்தனிக்குமுன் இவற்றின் இல்லாமல் அடித்துவிட வேண்டும்.. மதுரம் திரும்ப வந்து ஒழிந்த காலியிடத்தை தன் ஆச்சர்யத்தாலும் சந்தோஷத்தாலும் இப்பிக்கொள்ளட்டும்.
இந்தக் கள்ளிப்பெட்டியில் இருப்பது தினசரி மற்றும் வாரப் க்கைகளில் இருந்து கத்தரித்து சேமித்தவை. எளிய யோகமுறை, சிலையின் பயன்கள், குழந்தைகளுக்கு எதை எப்படி சொல்லித் தருவது.
ஆன்மீக உபதேசங்கள், ஏதேதோ கட்டுரைகள், சில கதைகள் ல்லாமே உதிரியாய் அடுக்கி இருந்தன. இதில் தேவையானவை இப்போது எதைப் படிக்கிறோம்? எதுவுமில்லை…
பெட்டியோடு வேண்டாமென்று ஒதுக்கினார்.
பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் கட்டுகள், ஏதோ இலக்கிய பத்திரிகைகள் , ராமஜெயம் எழுதின நோட்டு புத்தகங்கள், கடிதக் இடுகள்,ஏதோ ஜாதகக் குறிப்பு ‘ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் பிரஜோத்பத்தி
மாசி மாதம்.. எல்லாமும் ஒதுக்கப்பட்டன. மூலைக்குஒதுங்கின. அழித்துக் கட்டும் மனவோட்டம் சபேசனை ஆட்கொண்ட பின், ஒழித்தல் வேகம் பிடித்துவிட்டது. இவற்றையெல்லாம் ஒரு ஆயுளுக்கும்
சேர்த்து, ஏதோ ஒரு சமயம் உபயோகிக்கப்போகிறோம் என்றுதான் எல்லோருமே எல்லாவற்றையும் சேமிக்கிறார்கள். எதிர்ப்பார்த்த அந்தக் காலம் வருவதற்கு முன்னரே எல்லாமும் முடிந்து விடுகிறது. வீண்.. எல்லாமுமே வியர்த்தம்… எதற்கும் அர்த்தமில்லை என்று
எண்ணிக்கொண்டார்.
அடுத்த ஆறுமணிநேர துவந்த யுத்தத்தில், கால்கள் திமிரேறி இழுத்ததால் ஒருமுறை மட்டுமே எழுந்தார்.. ஆச்சு.. ஏறத்தாழ முடிந்து விட்டது..
இருக்கட்டும் என்று ஒதுக்கிக் கொண்டது சில பழைய போட்டோக்களும், குழந்தைகள் கிறுக்கிய சில தாள்களும் குழந்தைகளின் கல்யாணப்பத்திரிக்கைகளும், சில புத்தகங்கள் மட்டுமே
அறையின் அத்தனை மூலைகளிலும் கிழிபட்ட காகிதங்களும் புத்தகங்களும், காலி பெட்டிகளும் குவிந்து கிடந்தன. வாட்ச்மேன் வேணுவிடம் பத்து ரூபாய்க் கொடுத்தால் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய் விடுவான்.
சபேசன் பாத்ரூமுக்குள் நுழைந்தார். சோப்பைக் கையிலெடுத்துச் குழைத்தார். கையழுக்கு சோப்பைக் கருப்பாக்கி விட்டது. சுத்தப்படுத்துர் வஸ்துவைக் கூட அழுக்காக்க மட்டுமே முடிந்த தன் உள்ளங்கைகளை ஒருமுறை பார்த்துக் கொண்டார். கொட்டும் நீரில் கைகள் சுத்தமானது உள்ளங்கைகள் சிவந்து பளீரிட்டது. முகத்தில் நீரை வாரிவார் அடித்துக்கொண்டார். காசித்துண்டால் துடைத்தபடி ஹாலுக்கு வந்தார். மணி நாலாகிவிட்டது. அகோரமாய்ப் பசித்தது. மதியம் ஏது சாப்பிடவில்லை எனும் நினைவே அப்போதுதான் வந்தது.
சமையலறைமேடையில் சாதம்வடித்து, கத்தரிக்காய்க் கறியும் வத்தக்குழம்பும் செய்து வைத்திருந்தாள். எனினும் அதைச் சாப்பிட தோன்றவில்லை. வெளியில் போனால் தேவலைபோல் தோன்றியது வேட்டியை மாற்றி, சட்டையையும் மாட்டிக்கொண்டு வீட்டையு பூட்டிக்கொண்டு லிப்டில் இறங்கினார். எதிர்ப்பட்ட வாட்ச்மேஜை அரைமணி நேரம் கழித்து குப்பைகளை அகற்ற வரச் சொல்லி விட் மஹேந்திர விலாஸ் ஹோட்டலை நோக்கி நடந்தார்.
சட்டென்று பெரும்காற்று வீசி மூச்சைத் திணறடித்தது. புழுதி கிளம்பியது. வீதியில் கிடந்த காகிதங்கள் காற்றில் சுழன்றன. வேட்டி நுனியை பிடித்தபடி ரோட்டோரம் இஸ்திரிவண்டியின் அருகே

ஒதுங்கி நின்றார். காற்றுவெளியில் சுழன்ற காகிதங்கள் அவரைச் கும்மியடிப்பதுபோல் சபேசனுக்குத் தோன்றியது.. காற்று அடங்கியதும் ஹோட்டலுக்குள் நுழைந்தார். ஓரிருவர் மட்டும் காபி அருந்தியபடிஅமர்ந்திருந்தனர்.
‘என்ன சார் வேணும்?”
“லைட்டா என்னப்பா இருக்கு?”
“போண்டா பஜ்ஜியெல்லாம் இன்னமும் அரைமணிக்காகும்.. தோசை ஐட்டங்கள்தான் இருக்கு.”
“சரி ஒரு பேப்பர் ரோஸ்ட் கொண்டா”
“சரி சார்.”
பேப்பர்ரோஸ்ட்… சை!!’ சபேசன் நாக்கைக் கடித்துக் கொண்டார்.

மோகன்ஜி/தத்த்தி – விருட்சம் நாளிதழ்

One Comment on “மோகன்ஜி/’கூளம்’”

Comments are closed.