பெஷாரா….

தொடர்ந்து வித விதமான பேய்களை பற்றிய விவரங்களையும் அதன் வகை வகையான சேஷ்டை பற்றியும் சிரித்தபடி சக நண்பர்களின் எழுத்துக் களில் கரு கொண்ட கற்பனை திறனையும் ரசித்து படித்து கொண்டிருந்தாள் அவள்.
ஈர தலைமுடி காய வைக்க வேப்ப மரத்து கிளைகள் தழுவும் படிக்கட்டுகளின் மீது அமர்ந்து அலைபேசியில் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தாள் .
“அம்மா வேலையெல்லாம் முடிந்து விட்டது.
நான் போறேன்.. என்று கரகரப்பான குரலில் சொன்னாள் வேலைக்கார பெண் பூவாயி.
” ஏ ன் குரல் ஒரு மாதிரி இருக்கு. உடம்பு சரியில்லையா “என்று கேட்டபடி தலை நிமிர்ந்து பார்த்தாள். “எப்பவும் வெளியே புறப் படும் போது போயிட் டு வர்றேன்னு தான் சொல்ல வேண்டும். உடம்பை பார்த்துக்கோ ” என்றாள் . பதிலேதும் பேசாமல் உற்று பார்த்தபடி அவ்விடம் விட்டு விலகினாள் பூவாயி.
” இது தான் பேய்முழியா என்னாச்சு இவளுக்கு நாளைக்கு வரட்டும் பேசிக்கலாம்.” என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
இவள் எண்ணத்தை படித்தவள் போல் திரும்பிப் பாராமலே,” இனிமே வரமாட்டேன் ” என்று சொல்லு கையில் வாசல் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. படிக்கட்டின்
மேலிருந்து எட்டி வாசலை பார்த்தாள் .
பூவா யியின் மகன் சைக்கிளில் அமர்ந்து அழுத படி “அக்கா அம்மா இனிமே வேலைக்கு வராது. ஏன்னா காலையிலே வேலைக்கு வந்துட்டு இருக்கும் போது கார்காரன் இடிச்சு அவுத்தவே செத்து போச்சு. சுதாரிச்சிட் டூ வந்து சொல்றதுக்கு நேர மாயிடுச்சு. என்றான்.
“என்னது, அப்போ யார் என் கிட்டே இப்போ வந்து பேசியது , என்று உரக்க கூறியவாறு திகைத்து போனாள்.
“எப்படிக்கா அமமா வந்து பேசும்”தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.
அவசரமாக பூவாயி சென்ற பக்கம் திரும்பிப் பார்த்தாள். எங்கே காணோம் அதிர்ச்சியில் உறைந்து போன வளாக அவனை திரும்பிப் பார்க்கையில் அவன் சோகம் உண்மையை உணரச் செய்தது.
மெல்ல சுதாரித்துக் கொண்டு அவனை சமாதானம் சொல்லி கையில் பணம் கொடுத்து அனுப்பிய பின்பும் அதிர்ச்சி யுடன் துக்கமும் சேர்ந்து கொண்டது. ஆவியுடனா பேசிக் கொண்டு இருந்தேன் என்ற எண்ணம் தோன்றியதும் சற்று நேரம் மீளவில்லை பயத்திலிருந்து அவள்….
