பி.ஆர். கிரிஜா/தீபாவளி!

தீபத் திருநாளாம் தீபாவளி!
மகிழ்ச்சியாய்க் கொண்டாடும்
நன்னாளாம் தீபாவளி!
மகாலெட்சுமியின் அருள் வேண்டி
வரிசையாய் நீயும் விளக்கேற்று!
அக இருள் அகன்று புறமதில்
இன்பம் என்றும் நாம் பெறுவோமே!
புத்தாடை அணிந்து இனிப்பைச் சுவைத்து
கூடியாடி மகிழ்வோமே!
பெரியோர் சிறியோர் உ ற்றார் உறவினர் நண்பர்
அனைவரும் ஒன்றாய்க்கூடி
கண்ணனை வணங்கித் துதிப்போமே!
நல்லதை நினைத்து தீயவை களைந்து
நற்பணிகள் பல புரிவோமே!
தீபத் திருநாளாம் தீபாவளி!
மகிழ்ச்சியாய்க் கொண்டாடும்
நன்னாளாம் தீபாவளி!