ஜெயமோகன்/பன்றிகளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

மேலும் சில விபரங்கள் இதோ…

ஒன்று: பன்றிகள்
சேற்றில் திளைக்கவில்லை
ஏனெனில் சேறென்று
அவற்றிற்குத் தெரியாது.

இரண்டு: பன்றிகள் அழகானவை
ஏனெனில்
அவை ஒப்பனை செய்து கொள்வதில்லை.

மூன்று: பன்றிகள் ஈனமிருகங்களல்ல
ஏனெனில் அவை
தம்மைவிட தாழ்ந்ததாய்
எதைப் பற்றியும் கருதுவதில்லை.

கடைசியாய்
பன்றிகள் மனிதர்களின் அடிமைகளல்ல
ஏனெனில்
அவை மனிதனைச் சார்ந்திருக்கவில்லை.

(நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது (1988) பலர் கவிதைகள் எழுதினார்கள். ஜெயமோகன் ஒரு கவிதை எழுதினார். இந்தக் கவிதை விருட்சம் கவிதைகள் தொகுப்புநூல் ஒன்றில் (1988 – 1992) கொண்டு வந்துள்ளேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)