லக்ஷ்மி ரமணன்/வேண்டாமே

“என் கேள்விக்கு இன்று நீ பதில் சொல்லியே
ஆகணும். இல்லாட்டி உன்னை விடமாட்டேன்.”
என்ற அம்மா வைதேகியை சிவா வியப்புடன்
பார்த்தான்
“என்ன கேட்கப்போறே?”
“உன் கல்யாணவிஷயம்”
“ஆரம்பிச்சுட்டியா? நான்தான் எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேனே”
“அதுதான் ஏன்னு கேட்கிறேன். நாங்க வரன்
பார்க்கிறோம்னு சொன்னால் எங்களையும்
விடமாட்டேங்கிரே. நீ யாரையாவது காதலிக்கி
றாயான்னு கேட்டாலும் இல்லேங்கிறே. கல்யாணத்தின் மேலே உனக்கு அப்படி என்ன
வெறுப்பு?”
“காதலும் வேண்டாம். மோதலும் வேண்டாம்”
“என்னடா சொல்லறே .கலியாணத்தை இந்த
அளவுக்கு வெறுப்பு வர என்ன காரணம்?”
“அதுக்கு காரணமை நீதான் அம்மா”
“நானா..என்னசொல்லறே?”
ஆமாம். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து பாட்டியோடு நீ எப்பவும் சண்டை
போட்டுதான் நான் பார்த்திருக்கேன். ஒத்துப்போகாதவளுடன் எப்படி வாழறதுன்னு
அப்பாவிடம் ஆர்க்யூ பண்ணி பாட்டியை
முதியோர் இல்லத்தில் கொண்டு அப்பா சேர்க்கும்படி பண்ணிட்டே. அப்பாவும் நானும்
அங்கேபோய் பாட்டியைப்பார்த்து பேசிட்டு
கொஞ்சநேரம் இருந்துட்டு வருவோம். நீ வரவே மாட்டே. நான் கல்யாணம் பண்ணிண்டு எனக்கு மனைவியானவளும்
உன்மாதிரியே என் அம்மாவான உன்னை
முதியோர் இல்லத்தில் சேர்க்கணும்னு அடம்
பிடித்தால் நான் என்ன பண்ணுவேன்? பாட்டியை முதல்லே முதியோர் இல்லத்தி
லேருந்து வீட்டுக்கு கூட்டிண்டுவா.அப்புறம்
என் கல்யாணத்தைப்பத்தி யோசிக்கலாம்”
பாசத்துடன் பேசிய பேரன் சிவாவின் பதில்
அவளை அதிரவைத்தது.


One Comment on “லக்ஷ்மி ரமணன்/வேண்டாமே”

Comments are closed.