
நீண்ட
கவிதை எழுதும்
நோக்கமில்லை
எனக்கு
ஒரு நீண்ட கவிதையைப்
படிக்கும்போது
என் மனம்
சஞ்சலம் அடைந்து விடும்
பாதியில்
நிறுத்தி விடுவேன்
படித்தவரை
எந்த அர்த்தமும்
கூடாமல்
திரும்பவும் ஆரம்பத்திலிருந்து
படிக்க ஆரம்பிப்பேன்
திரும்பவும்
கவிதையை விட்டு
எங்கோ
போய் விடுவேன்
உங்களுக்கு
ஒரு வேண்டுகோள்
நீண்ட கவிதையை
எழுதாதீர்
நிச்சயமாக நம்புங்கள்
நான்
படிக்க மாட்டேன் என்று
