
சிறுவயதில்
அப்பாவோடு பயணிக்கும் பொழுது
பெரிய ட்ரங்க் பெட்டி
நான் பயணிக்கும் போது
ஆடம்பர சூட்கேஸ்
இப்போ குடும்பமாய் பயணிக்கிற வேளை
அவரவர் உருட்டிச்செல்ல
சக்கரம் வைத்த பெட்டி
காலம் மாறி
பெட்டி மாறியதில
ரயில் நிலையத்தில்
சிவப்புச்சட்டை போர்ட்டர்
குந்த வைத்து வெறுமே உட்கார்ந்து
பெட்டியோடு
ஓட்டிய சக்கரத்தையே
வெறித்துக் கொண்டிருந்தார்.
