வைத்தியநாதன்/தொலை தூரம்

தொலைந்து போனவர்கள்
என்றார் கந்தசாமி –
மெய்தான்-
என்றாலும்
சமூக ஊடகங்கள்
இருந்தாலும்-
தடை விதிக்கிறோம் ரத்து செய்கிறோம்
தொலைக்கிறோம்
மீட்கிறோம்
தொலைந்து போகிறோம்
மீட்கப் படுகிறோம் –
என்றாலும்
இருந்தாலும்
மெய்தான்
கந்தசாமி –
ஆதூரம்
தொலைதூரம்தான்.