
கோடிக் கணக்கில் நீயே பிரிந்து
பொம்மலாட்டம் ஆடுகிறாய்
ஒவ்வொரு பொம்மைக்கும் ஒருவிரல் என்றால்
எத்தனை விரல்கள், எத்தனை கைகள்!
எத்தனை கோடி நட்சத்திரங்கள்!
எத்தனை கோடி அணுத்துகள்கள்
அத்தனையும் ஒரே புள்ளியில்
போட்டடைத்து வைத்தாய்!
கொஞ்சம் சிலுப்பிக் கொண்ட போது
புள்ளியைப்
போட்டுடைத்து விட்டாய்!
அடைப்பதும் உடைப்பதும் உன்விளையாட்டு
அகப்பட்டுக் கொண்டேன் என்றுநான்
அங்கலாய்ப்பது கேட்டு
நீசிந்தும் புன்னகைக்குத் தானிந்தப் பாட்டு – நீ
பொம்மலாட்டக்காரி மட்டுமா?
பொம்மைகளும் நீதான்,
ஆடலாம் வா!
10-11-2024

மிக்க நன்றி
அருமை !👏👏🙏🙏