
ஒரு ஏழை ப்ராமண சமையல்காரர் தன் மனைவி மற்றும் 4 பெண்களுடன் பெரியவா தரிசனத்திற்கு வந்தார் . பிராமணரும் குழந்தைகளும் மடத்திற்குள் போக மனைவி வெளியில் நின்றாள்.
பிராமணர் பெரியவாளிடம் யாசகம் கேட்டார். “பெரியவா, எனக்கு ரெண்டு ஒன்பது கஜம் புடவை, ரவிக்கை கொடுங்க” என்றார். கூட இருந்த பக்தர்கள் அவரை ஒரு மாதிரி பார்த்தனர். ‘ஒரு சன்யாசியிடம் கேட்க வேண்டுமா இதை’ என்பது போல். ஆனால் மஹான் ஒன்றும் சொல்லாமல் மடத்தின் சார்பில் அவருக்கு கேட்டதைக் கொடுக்கச் சொன்னார். அவரே ஒரு குழந்தையிடம் ஒரு புடவை கொடுத்து “உன் அம்மா கிட்ட கொடுத்து 9 கஜம் புடவை கட்டிண்டு உள்ளே வரச் சொல்லு” என்றார். மற்றவர்கள் வியப்புடன் அவரைப் பார்த்தபோது “அவ கிட்ட ஒன்பது கஜ புடவை இல்லை. அதனால உள்ள வராம வெளியேவே நிக்கறா” என்றார்.

Arumai !🙇♀️🙏