அழகியசிங்கர்/கடவுள் பக்தி

காலையில் எழுந்தவுடன்
குளித்துவிட்டு
விபூதி இட்டுக்கொள்கிறேன்

இட்டுக்கொள்ளவில்லை
என்றால்
மனைவி சாப்பாடு போட மாட்டாள்

எனக்குக் கடவுள் பக்தியை
இப்படித்தான்
புகட்டுகிறாள்.