செ.புனிதஜோதி/அனைவருக்கும் நன்றி

நன்றியைப் பற்றி ஒரு அதிகாரம் படைத்துள்ளார் திருவள்ளுவர். அதேபோல் இலக்கியங்களிலும் பல செய்திகள் உள்ளன. நன்றி உணர்வை வெளிப்படுத்தவே பல கல்வெட்டுக்களும், நடுகல்லும்,பல விழாக்களும் நம்மிடத்தில் நிறைந்துள்ளன . இந்தப்பிரபஞ்சம் நிலைத்து வாழ்வதற்கு அன்பு தான் ஆதாரமொழி. ஒவ்வொரு உயிர்களிடத்திலும் நிரம்பி தான் உள்ளது.
இது இருக்கட்டும். என் விஷயத்திற்கு நான் வருகிறேன். என் மாமியாருக்கு கேன்சர் என்பதால் கடந்த நாட்களாக அப்போலோவிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். இந்தச் சூழலில் என் பிறந்த நாள் என்பது எனக்கு மறந்து விட்டது. ஆனால் முகநூலிலும், தொலைபேசியிலும், புலனத்திலும்,உள்பெட்டியிலும் உங்கள் அன்பு வாழ்த்து மழையால் நனைந்து நெக்குருகிப்போனேன். நன்றியைத்தவிர வேறொன்றும் இல்லை. உங்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியை பதிவு செய்கிறேன்.