அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 86

15.11.2024 – வெள்ளிக்கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் :  வணக்கம்
அழகியசிங்கர் :  வணக்கம் 
மோகினி : .இன்று கவிதைகள் வாசிப்புக் கூட்டம் எப்படிப் போயிற்று.
அழகியசிங்கர் :  கவிதைகள் படிக்க யாரும் தயாராய் இல்லை.
மோகினி :  மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமைதான் நீங்கள் கூட்டம் நடத்துகிறீர்கள்.
அழகியசிங்கர் : ஆமாம்.  ஆனால் யாருக்கும் விருப்பமில்லை போல் தோன்றுகிறது. அல்லது ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாத காரணம் இருக்கும்.
ஜெகன் : நீங்கள் நிறுத்திவிடலாமென்று பார்க்கிறீர்களா? 
அழகியசிங்கர் : யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதை எப்படிச் சரிசெய்வதென்று. யாருக்கும் தங்களுடைய கவிதைகளை மட்டும் வாசிக்க விரும்பவில்லை.
ஜெகன் : கவிதைப்புத்தகம் அச்சானால் விற்பதில்லை. கவிதை வாசிக்கவும் யாரும் வர விரும்பவில்லை. என்ன செய்வது?
அழகியசிங்கர் :  ஒன்றும் செய்ய முடியாது.  நான் தொடர்ந்து கவிதைகளைக் குறித்து யோசித்த வண்ணமாகத்தான் இருக்கிறேன்.  
மோகினி : கடைசியில் நீங்கள் ஒருவர்தான் உங்கள் கவி அரங்கத்திற்கு வருவீர்கள் என்று நினைக்கிறேன்.
அழகியசிங்கர் : ஆமாம் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மோகினி :  இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
ஜெகன் : இரவு 11.08 ஆகப் போகிறது.  முடித்துக் கொள்ளலாம்.
அழகியசிங்கர்.  முடித்துக் கொள்ளலாம். 

                             (பதிவான நேரம் : இரவு 11.06)