அழகியசிங்கர்/சம்மதம்

வீட்டில் பரபரப்பு. ஆனால் ரம்யா அலுவலகம் போய்விட்டு மாலை ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்று வருவதாகச் சொல்லியிருந்தாள்.
பெண் பார்க்கிற அன்றுகூட இந்தப் பெண் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாளே என்று அவையத்திற்குக் கடுப்பு.
சரியாக ரம்யா வந்தபிறகு அவர்களும் வந்திருந்தார்கள். முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டு பளிச்சென்று அவர்கள் முன் நின்றாள்.
முதன்முறையாக மாதவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். பதிலுக்கு அவனும்.
மாதவன் வெளிப்படையாக எனக்கு ரம்யாவைப் பிடித்திருக்கிறது என்றான்.
பார்க்கப் போனால் பையன் வீட்டிலிருந்து யாராவது பெண் பார்க்க வந்தால் உடனே பெண் பிடித்திருக்கிறது என்று சொல்லமாட்டார்கள். வீட்டிற்குப் போய் சொல்கிறேன் என்பார்கள்.
அவள் அம்மா அவையம் படப்படப்பாக இருந்தாள்.
இந்த விதிமுறையை மாற்றி அமைத்தது மாதவன்.
ரம்யாவும் ஒரு கோரிக்கை விடுத்தாள்.
இருவரும் தனியாக சந்தித்தார்கள்.
ரம்யா அவனைப் பார்த்துச் சொன்னாள்.
“உங்கக் குடும்பத்திலே நீங்க ஒருவர்தான். என் அப்பாவிற்கு இரண்டு பெண்கள். நானும் என் தங்கையும். தங்கை படிக்கிறாள். அப்பாவிற்கு வருகிற வருமானம் போதாது.நான்தான் suஜீஜீஷீக்ஷீt பண்ணனும்,” என்று கூறி நிறுத்தினாள் ரம்யா.
“புரிகிறது,”என்றான் மாதவன்.
“நான் உங்கள் வீட்டுக்கு வந்தாலும், நான் சம்பாதிக்கிற பணத்தை என் குடும்பத்திற்குத்தான் செலவு செய்வேன். அதற்குச் சம்மதமா..?”
கொஞ்சங்கூட யோசிக்காமல், “சம்மதம்,” என்றான் மாதவன்.
அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா.
“நான் உன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்…நீ சம்பாதிக்கும் பணத்தை அல்ல,” என்றான் கம்பீரமாக.
(25.05.2023)