தங்கேஸ் கவிதைகள்

அரங்க கவிதைகள் 15.11.2024

( ஹைக்கூ )

விண்மீன்களையெல்லாம் எண்ணி முடித்தேன்
எங்கே போயிற்று என் கோபம்

எவ்வளவு கனிந்த வானம்
ஒரு துளி விழுந்தால் கூட போதும்
உள்ளங்கையில் ஏந்திக் கொள்ளலாம்

வாசல் துளசி
அசைந்தாடத் தொடங்குகிறது
வரப் போகிறாய் நீ

பனியைப் பற்றி ஒரு வார்த்தை
சொல்வதற்கு ஏதுமில்லை
செம்பருத்தியிடமே கேட்டு விடு

கான்கிரீட் கூரைகளுக்கு மேல்
பறவையின் சிறகுகள்
இப்பொழுது தெரிகிறது வானம்

மதில் மேல் பூனை
பார்த்துக் கொண்டேயிருக்கின்றன
எலியின் கண்கள்

வானத்தில் குதிக்கிறான்
குறும்புக்காரச் சிறுவன்
தெருவெல்லாம் மழை நீர்

சாம்பலின் நிறத்தில்
பூனையின் நீண்ட வால்
எலியும் அதே நிறம் தான்

குழல் விளக்கை அனைத்தேன்
சுவரில் முட்டுகிறது
ரயில் தட்டான் பூச்சி