ஓர் அருவியின் சப்தம்
அரண்மனையினுள்
சக்கரவர்த்தியின் படுக்கை அறையில்
சுவரில் ஓர் உன்னதமான ஓவியம் இருந்தது.
அந்த ஓவியத்தினுள்
ஒரு கர்ஜிக்கும் அருவி இருந்தது.
ஓரிரவு அவர் அரசியுடனோ
காமக்கிழத்தியுடனோ
உறங்க மறுத்துவிட்டார்.
மறுநாள் காலை
மேன்மை தாங்கிய சக்கரவர்த்தி எரிச்சலடைந்தார்
அவர் ஓவியருக்கு அழைப்பாணை அனுப்பினார்.
கடுப்பில் முகஞ்சுழித்தபடி அவர் பேசினார்:
இரண்டு நாட்களுக்கு முன்னால்
நேற்று இரவும் கூட
என்னால் நன்றாகத் தூங்க முடியவில்லை.
ஏன்?
ஓவியத்திலிருக்கும் அருவி இரவு முழுக்க
உறுமிக்கொண்டே இருந்தது
குழப்பமான சப்தம் நிறைந்திருந்தது.
அந்த அருவியைச் சுவரிலிருந்து
முற்றிலுமாக ஒற்றி நீக்கு.
உடனடியாக
அந்த அருவி நீக்கப்பட்டது.
மறு நாள் காலை மேன்மை தாங்கிய அரசர்
ஆழந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்,
நன்றாக நெட்டி முறித்தார்
தனது அறையின் பிரபுவிடத்து சொன்னார்:
ஆஹ் நேற்றிரவு நான் நன்றாகத் தூங்கினேன்
அந்தப் பாழாய்ப்போன அருவியின் சத்தம்
சுத்தமாக இல்லை
ஆகையால் என் படுக்கை அறை
அமைதியாக இருந்தது.
நன்று!
