ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 87/அழகியசிங்கர்

16.11..2024 – சனிக்கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் :  வணக்கம்
அழகியசிங்கர் :   ஒரு விஷயத்தை முக்கியமாகச் சொல்ல மறந்து விட்டேன்.
மோகினி : என்ன?
அழகியசிங்கர் :  தீபாவளி மலர்களைப் பற்றிச் சொல்லாமல் விட்டு விட்டேன்.
மோகினி :  உங்கள் படைப்புகள் தீபாவளி மலர்களில் வெளி வந்துள்ளனவா?..
அழகியசிங்கர் : ஆமாம்.  அமுதசுரபி ஆசிரியருக்கும், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெகன் :  நீங்கள் பெருமைப்படலாம். 
அழகியசிங்கர் : லேடீஸ் சிறப்பு தீபாவளி மலரில் என் கவிதையும், அமுதசுரபி தீபாவளி மலரில் கட்டுரை ஒன்றும் பிரசுரம் ஆகி இருக்கின்றன.
ஜெகன் : கட்டுரை யாரைப் பற்றி எழுதி உள்ளீர்கள்?
அழகியசிங்கர் :  காசியபன் என்ற எழுத்தாளரைப் பற்றி.  அவருடைய அசடு நாவலைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையில் என் கவிதை வந்திருக்கிறது.  இந்தத் தருணத்தில் கவிதை வந்தது முக்கியமாகக் கருதுகிறேன்.  நான் இதுவரை 500 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  ஏற்கனவே 400 கவிதைகள் கொண்ட ஒரு தொகுப்பும், 100 கவிதைகள் அடங்கிய இன்னொரு தொகுப்பும் கொண்டு  வந்துள்ளேன் .  இந்த ஆண்டு இன்னொரு நூறு கவிதைகள் கொண்ட மூன்றாவது தொகுப்பு கொண்டு வர உள்ளேன்.  இதுவரை500 கவிதைகள் எழுதி உள்ளேன். என் கவிதையைப் பிரசுரம் செய்த கிரிஜா ராகவனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மோகினி : தீபாவளி மலர்களில் படைப்புகள் வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : அற்புதமான விஷயமாகக் கருதுகிறேன்.  ஓராண்டு முழுவதும் ஒரு தீபாவளி மலரைப் படித்துக் கொண்டிருக்கலாம். நான் இந்த இரண்டு தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு எழுதுவது என்று தீர்மானித்துள்ளேன்.  
மோகினி : தீபாவளி மலர் என்பது தமிழ் நாட்டில்தான் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.
ஜெகன் : ஒவ்வொரு முறையும் அசோகமித்திரனின் கதைகள் ஒவ்வொரு தீபாவளி மலரிலும் வரும்.
அழகியசிங்கர்.  ஆமாம். அவர் அலட்சியமாக எல்லா மலர்களுக்கும் கதைகளை வாரி வழங்குவார். ஒருமுறை ஒரு பழைய ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் நகுலனின் கதை வந்திருந்தது. 
மோகினி : மணி இரவு 11 ஆகப் போகிறது. நாம் பேசியதை முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர் ; நிச்சயமாக.  இன்னும் நாம் தீபாவளி மலர்களைப் பற்றிப் பேசலாம். 

                             (பதிவான நேரம் : இரவு 10.54)