ஷண்முக சுப்பையா/கறுத்த பறவை

கறுகறு வென்று
ஒரு பறவையுண்டு
கண்டால் நீ அதை
காகமென்றே
கூறிடுவாய்.
என்றாலது
காகாவென்று
கத்திடாமல்
கூகூவென்று
கூவிடுமேல்
அது குயிலென்றே
நீ தேர்ந்திடுவாய்.