கோபிகிருஷ்ணன்/ஒவ்வாத உணர்வுகள்

இரைச்சலிலிருந்து தப்பித்தால் போதும் என்ற அவசரத் தில், தற்சுகாதாரச் செயல்களைத் துரிதமாக முடித்துக் கொண்டு சாப்பிடாமலேயே, அலுவலகம் திறப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னாலேயே அதை வந்தடைந்து, வாட்ச்மேனிடம், வேலை அதிகமாக இருக் கிறது என்ற பாதி உண்மை பாதி பொய்யைச் சரியான விகிதத்தில் கலந்து சொல்லி, அலுவலகத்தில் நுழைவு பெற்று வேலையை ஆரம்பித்துவிட்டேன். இனி உருப் படியான காரியங்கள் ஆரம்பித்துவிட்டன. அமைதியான சூழலில் சற்று வேகமாகவே பணிகளை ஒன்றன்பின் ஒன்றாக முடித்துவிடலாம். உழைப்பதில் ஏனோ ‘நான்’க்கு ஒரு திருப்தி. ஒரு வேலையை நேர்த்தியாகவும் தவறு இல்லாமலும் செய்து முடித்த பின்பு அதில் கிடைக்கும் பூர்ணத்துவத்தில் ஒரு சொகுசு. எல்லாம் ‘மனம். சர்வமும் அதுவே.

தாராவுக்கு முந்தைய தின இரவிலிருந்து சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பியதிலிருந்து – விட்டு விட்டு துவ ஜுரம். குழந்தை வாணிக்கு வறட்டு இருமல், ஒழுகும் மூக்கு, விட்டு விட்டு ஜுரம். தெரிந்த மாத்திரைகள் கேட்கவில்லை. நான் என் நிம்மதியை நாடி, மனைவியின் ஜுரத்தையும், குழந்தையின் சுகக்கேட்டையும் அசிரத்தைப் படுத்தி, மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைத்து, அமைதியான சூழலில் இயங்கிக்கொண்டிருந்தேன் – கோழிக்கறி சாப்பிடுகிறவன் என்னவோ ருசித்துத்தான் சாப்பிடுகிறான். அது உணவு என்பது சப்பைக்கட்டு மனிதக் காரியங்களை நியாயப்படுத்திக் கொள்ளும் காரணங்களை விரல் விட்டு எண்ண முடியுமா என்று தெரியவில்லை. மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்குச் சென்று நிலைமையைத் தெரிந்துகொண்டு,

மாலையில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிடலாம். ஆனால் திடீரென்று  குறுக்கிட்ட சுயநலம் வீடுவரை நடக்க  இடம் கொடுக்கவில்லை. களைப்பு என்ற பொய்க் காரணத்தை சௌகரியமாக உருவாக்கித் தந்தது. உடுப்பியிலிருந்து  வரவழைக்கப்பட்ட சாம்பார் சாதம் அன்றைக்குக் கூடுதல் ருசியுடன்  இருப்பதாக ஒரு எண்ணம், பிரமை. எல்லாமே மனம் சார்ந்த விளையாட்டு. இனி மாலை வீடு திரும்பினால் போதுமானது

அலுவலகத்தை விட்டுப் புறப்படும் சமயம் ஒரு நல்ல  துறையில் நேர்மையாக உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு நெருங்கிய நண்பர்

அவருக்குத் துறை அநீதி இழைத்திருந்தது.   அவருடன் ஒரு கண்ணியமான நடுவயது எழுத்தாளர். அவருடைய இலக்கியப் படைப்புகள் என்னை வெகுவாகக்  கவர்ந்திருந்தன.     சமூக இயக்கங்கள் பொதுவாக நிறுவனங்கள், இவ்விடங்களில் நிகழும் அயோக்கியத்தனங்கள் பற்றி அறிவு பூர்வமான  சம்பாஷணை,  சராசரியிலிருந்து தெரியாத்தனமாக சரிந்து சற்று கண்ணியமாக இயங்கும் ஓரிரண்டு ( இது ஒரு மிகையான எண்ணிக்கை என்று கொள்வது தோராயமாக, இல்லை.    அநேகமான நிச்சயமாகச் சரியாகத்தான் இருக்கும்) நிறுவனங்களைத் தவிர்த்து, மற்றவைகள் அனைத்திலும்   குறைந்தது ஒரு black sheep. வெண்புறாக்கள் மீது கல்லையெறிந்து விளையாடுவதில் ஒரு பிரத்தியேகக் குதூகலம். நாலு பேரு  இருக்கிற இடத்தில் இதெல்லாம் சகஜம். எல்லாமே

 சகஜமான சக்கஜம்.    இந்த சகஜங்களைச் சகஜமாகச் சகித்துக் கொண்டு முணுமுணுப்புகளை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்ளக் கற்றுக்கொண்டிருக்கும் சராசரி நபும்சகர்களும் பாரதத்தில் சர்வசகஜம். எல்லா விரல்களுமா ஒரே மாதிரி இருக்கின்றன? மிகவும் வாஸ்தவம். புனித கங்கை, பவித்திர தாமிரபாணி, தூய கூவம் ஓடும் நாட்டில் முதுமொழிகளுக்குப் பற்றாக்  குறை வந்ததாகச் சரித்திரம் இல்லை. ரதத்தைப் படைக்கும்   வல்லுனன் ஒரு சிறு கோணலை ஒரு இடத்திலாவது பற்படுத்திவிடுவான். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அது பறந்து போய்விடும். எந்த நிறுவனமோ, துறையைத் தாங்கிய  கட்டிடமோ வானில் உலா வருவதை இதுவரை யாரும் பார்த்தாகத் தெரியவில்லை. எப்பொழுதாவது இரவில் அசுவாரஸ்ய மாசுப் புரட்டும் செய்தித் தாள்களில் இந்த மாதிரியான அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் செய்தி எதுவும் கண்ணில் பட்ட தில்லை. பேச்சில் முழுமையாக ஈடுபட்டிருந்ததில் தற்செயலாக

மணிகாட்டியைப் பார்த்ததில் 8-00 என்று அறிந்துகொண்ட போது சற்று துணுக்குற்றேன்.

நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினேன். தாராவின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. வாணிக்கு, சுகக்கேட்டிலும் விளையாட்டு, குதி இத்தியாதி. மருத்துவச் செலவுக்கு ஒரு நண்பரிடமிருந்து கடனாகப் பெற்ற முப்பது ரூபாயும், ஏற்கனவே இருந்த பத்து ரூபாயும் சட்டைப் பையில் கனக்க மருத்துவரிடம்  அழைத்துச் செல்ல ஒரு ரிக்ஷா.   பணம் ஒரே நபரிடம் தேங்கக் கூடாது. அது என்னிடமிருந்து இன்னொருவரிடம் போனால் தான் பணப் புழக்கப் பரவல், பொருள் சுழற்றி முதலியன நிகழும்.   இது பொருளியல். என்னிடம் கையில் பைசா இல்லாமலும், நண்பர் ஒருவரிடம் ஐம்பது ரூபாயும் இருந்தால் சராசரியாக தலா இருபத்து ஐந்து ரூபாய் இருப்பதாகப் பொருள். புள்ளி விவரவியலில் சராசரி என்ற பிரிவு புகட்டும் போதனை. என் கையில் காசில்லாத பொழுது எனக்கு 25 ரூபாய் கிடைத்தால் அது குதூகலம். இது உளவியல். கல்விதான் எவ்வளவு சுலப மானது! கஷ்டப்பட்டுப் பல்கலைக்கழகத்தில் வருடக்கணக்கில் தொந்தரவுபட்டுப் பட்டதாரிகளாகின்றவர்களுடன் ஏனைய அனைவரும் படிக்காத மேதைகள் அல்லது ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்கள் முதலியவர்களாக ஊர் சுற்ற வருவதில் நாட்டின் கல்வி அறிவுத் தரம், சிறு சந்துகளைத் தவிர்த்து பிரதான சாலை, மைதானம் முதலிய இடங்களிலிருந்து அண்ணாந்து பார்த்தால் தெரியும் வானை எட்டும் எல்லையில்லா ஆனந்தம் நாடு செழித்துத் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறது. மருத்துவ ஆலோசனைக்கும் தெரிந்த மருந்துக் கடையில் கடனில் வாங்கிய 22 ரூபாய் குளிகை, பொடி, பளபளக்கும் கண்ணைக் கவரும் அழகான மாத்திரைகள் தவிர்த்து, அந்த வாடிக்கைக்காரரிடம் கிடைக்காததால் வேறொரு மருந்துக் கடையில் வாங்கிய இருமல் கட்டுப்படுத்தி திரவத்திற்கு ஐந்து ரூபாய் நாற்பது பைசாவும், பத்து ரூபாய்த் தாளுக்கு சில்லரை இல்லாது கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாத, முதலிய காரணங்களினாலும், ‘திரும்பி வார்ரப்போ ஒடம்பு சரியில்லாத அம்மாவெ அவ்ளோ தொலைவு நடந்தா இட்டுண்ணு போவே சார், நான் வேண்ணா வெய்ட் பண்றேன்’ என்ற ரிக்ஷா ஓட்டுநர் என் மனைவிமீது சொறிந்த அன்புத் தொல்லையைத் தாங்க  முடியாததாலும் அவர் வண்டியிலேயே, வாடிக்கையான மருந்துக் கடை,  வாடிக்கையில்லாத மருந்துக்கடை  தலிய இடங்களுக்குச் சென்று  பேசியதற்கு மேல் சிறிது அதிக தூரமே அவரது ,

வாகனத்தை உபயோகப்படுத்திக் கொண்டதில், ஒரு ரூபாய் அதிகமாகத் தர எண்ணி, உடலுழைப்புதான் உண்மையான இழப்பு என்று மனதின் மூலையிலிருந்து ஏதோ ஒன்று சொல்ல, முளைத்த கூடுதல் ஒரு ரூபாயைவிட மேலும் ஒரு பொய் அதிகமாக அவருக்குப் போட்டுக் கொடுத்து, பையில்  ஏழு ரூபாயுடன் வீடு திரும்பி, மீண்டும் யாரிடம் கடன் வாங்குவது என்ற கலவரம் புடைசூழ, சரியான மருந்து வகையறாக்களை தாராவுக்கும் வாணிக்கும் அளித்து, ஒரு கப் டீயைக் இடித்து புத்துயிர் பெற்று படுக்கையில் கிடந்து எண்ணங்களை அசை போட ஆரம்பித்தேன்.

முந்தைய தினம் பாரதத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர் தொலைதூரத்திலிருந்து வந்திருந்தார். அயராத உழைப்பின் அவசியத்தையும் உற்பத்தியைப் பெருக்குவதின் அவசரத்தையும் மேடையில், வானொலியில், படத் தொலைக்காட்சிகளில், சுவரொட்டிகளில், சஞ்சிகைகளில், வேறு எங்கெங்கு முடியுமோ  அங்கெல்லாம் வலியுறுத்தும் பிரபல பாரதத் தலைவர்கள் நாநகர்களுக்கு விஜயம் செய்யும்போது, கூடவே ஓய்வின் அவசி இத்தையும் உளவியல் ரீதியில் வலியுறுத்தி, அலுவலகங்களைப் பாதி நாளுக்கு மேல் மூடிவிடுவது சாதாரணமாக நிகழும் சமாச்சாரம், சீக்கிரமே அடைக்கப்பட்ட அலுவலகத்திலிருந்து தி திரும்பி, வாணி தூங்கும் வரை, என்னுடைய விருப்பமான செயல்களான புத்தகங்களைப் படிப்பது, ஏதேதோ எழுதுவது போன்ற காரியங்களைச் செய்ய முடியப் போவதில்லையாதலால்,\

முந்தைய தினம் பாரதத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர் தொலைதூரத்திலிருந்து வந்திருந்தார். அயராத உழைப்பின் அவசியத்தையும் உற்பத்தியைப் பெருக்குவதின் அவசரத்தையும் மேடையில், வானொலியில் பட-தொலைக்காட்சிகளில், சுவரொட்டி களில், சஞ்சிகைகளில், வேறு எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் வலியுறுத்தும் பிரபல பாரதத் தலைவர்கள் மாநகர்களுக்கு விஜயம் செய்யும்போது, கூடவே ஓய்வின் அவசியத்தையும் உளவியல் ரீதியில் வலியுறுத்தி, அலுவலகங்களைப் பாதி நாளுக்குமேல் மூடி விடுவது சாதாரணமாக நிகழும் சமாச்சாரம். சீக்கிரமே அடைக் கப்பட்ட அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி, வாணி தூங்கும் வரை, என்னுடைய விருப்பமான செயல்களான புத்தகங்களைப் படிப்பது ஏதேதோ எழுதுவது போன்ற காரியங்களைச் செய்ய முடியப் போவ தில்லையாதலால், ஜனநாயக அரசியல் தலைவர் வரும் வழியே பிரஜைகள் சாதாரணமாக நடமாட முடியாத திவ்ய நிலையில் ஊர்வலம் வராத வழியில் அருகாமையிலுள்ள ஒரு கலையரங்கத்தில் மூன்று டிக்கெட்டுகளைக்கிழித்துக் கொடுத்து, ‘இன்னும் யாராவது வர்ராங்களா சார்?’ என்று டிக்கெட் கிழித்துக்கொடுக்கும் ஊழியர் வினவ, ‘இல்லை. குழந்தைக்கு ஒரு டிக்கெட்’ என்று நான் சொல்ல என்னை அவர் ஒரு வினோதமான பார்வையில் நோட்டமிட, மூவரும் உட்சென்று சிறிது நேரம் சரியான ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு சந்தோஷித்ததில், சட்டைப் பையில் மிஞ்சியது பத்து ரூபாய், மீசைக்கு ஆசைப்பட்டால் கூழை ருசிக்க முடியாதுதான்.

இடைவேளையின் போது, ஒரு காட்சி நினைவில் தங்கியது.

நல்ல உடல்வாகுடன் கை, கால், கழுத்து முதலிய பகுதிகள் தாராளமாகத் தெரிய நாகரிக decollete உடையணிந்த ஒரு இளம் பெண் தன் தோழனுடன் அன்னியோன்னியமாக ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்; உடையணிவது மற்றவர்களைத் திருப்திப் படுத்த. பார்ப்பவர் கண்களை ஈர்க்கும் ஆடைகளை அணிந்து கொண்டு, மிகவும் இயல்பான முகபாவத்துடன் வளைய வருவது, ஒரு வரம்புக்குள் கொணரமுடியாத தற்பொழுதைய வக்கிரமான நாகரிகம். படிப்பு வாசனை அதிகமில்லாத சராசரி சென்னை-வாழ் பாரதக் குமரி ஒருத்திக்கு அதே ஆடைகளை அணிவித்து வெளியில் நடமாடச் சொன்னால், வெட்கத்தால் கூசி, குனிந்து குறுகி, முகம் மிகவும் சிவந்து, பயங்கரமான self consciousness ஏ ற்பட்டு உருக் குலைந்து விடுவாள் என்று கொள்வது தவறாகிவிடாது என்பதென்னவோ உண்மை. பிறவி உறுப்புகள், பாலுறவு சம்பந்தப்பட்ட பிற அங்கங்கள்பால் பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காகவே உடைகள் தோன்றியதாக ஆடைகளைப்பற்றி ஒரு சித்தாந்தம் உண்டு. நினைப்பதற்குக் கொச்சையாகவும் விரசமாகவும் இருக்கிறது. மேலை நாடுகளில் சில காலம் முன் புழங்கிய topless, இயற்கையுடன் ஒன்றி இழைய, இப்பொழுதும் இருக்கும் nudist camp இத்தியாதி. மூலை முடுக்குகள் உள்ளிட்டு, நாடு முழுவதும் வியாபித்திருப்பதாக பக்தி யுடன் நம்பப்படும் தேசிய ஒருமைப்பாட்டின்  விளைவான, ஒரு குழுவின் பழக்கவழக்கங்கள் மற்றொரு குழுவுக்குப் பரவும் நிலையையும் தாண்டிச் சென்று சர்வதேச ஒருங்கிணைப்பில் லயிப்பதில் ஒரு வினோதமான கிளுகிளுப்பு. என்ன இருந்தாலும் மனிதன் மனிதன் தான்(?) ஏவாள் சாத்தானின் ஆசைக்கிணங்கி உட் கொண்ட தடைவிதிக்கப்பட்ட கனியின் விளைவில் உருவான மனித குலம் இசகு பிசகாக ஏதாவது செய்து வைப்பதில் ஆச்சரியப்படும் சமாச்சாரம் ஒன்றுமிருப்பதாகத் தோன்றவில்லை.

அடுத்தநாள், சற்று குணமாகியிருந்த வாணியை, வழக்கத்துக்கு மாறாக, காலையில் நானே பள்ளிக்கு அழைத்துச் சென்றதில் 5 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. ‘இதென்ன கார்ப்பரேஷன் ஸ்கூலா கான்வென்டா? இஷ்டத்துக்கு வந்தா எப்படி? திங்கக் கௌ மெய்லிருந்து லேட்டா வந்தா ஃபிஃப்டி பைசே ஃபைன்’ கரஸ்பாண்டென்ட் இரைந்துகொண்டிருந்தாள். கல்வியை யானை குதிரை விலையில் விற்கும் கடையில் எதற்கெடுத்தாலும் காசு கேட்பார்கள் என்பது எனக்குக் கொஞ்ச நாளாகவே தெரிந்திருந்தது. இறை வணக்கம் என்ற தேவையில்லாத சடங்கு முடிந் த பிற்பாடு போய்க்கொள்ளலாம் என்றுதான் நான் வேண்டுமென்றே  தாமதித்துப் போயிருந்தேன்.

ஜூன் 10-ஆம் தேதி பள்ளி தொடங்குவதாக அறிவித்து, பிறகு நடுவில், குருவி, கிளி, வெள்ளை எலி-இதில் ஏதோ ஒரு ஜோசியம் பார்த்ததில் 14-ஆம் தேதிதான் மிக நல்ல நாள் என்றறிந்து துவக்க நாளைத் தள்ளிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்பி செயல்படும் convent-ல் மூன்று வாரம் கழித்து முதலில் என் மகளுக்குச் சொல்லிக் கொடுத்த rhymes:

Hot cross buns!

Hot cross buns!

One a penny, two a penny

 Hot cross buns!

எடுத்த எடுப்பிலேயே பிழைப்புக்கு வழி சொல்லிக்கொடுத்திருந் தார்கள். என் மகள் 17 வயதில் +2 முடித்த கையோடு, ஒரு கூடையில் பன்களை அடுக்கி, தலையில் பிரிமனை, பன்கூடை சகிதமாய்த் தெருத் தெருவாகச் சுற்றி, மொய்க்கும் பாரத தேசீயப் பற வையினமான ஈக்கூட்டத்தை ஒரு சிறு குச்சியால் கலைத்துக் கொண்டே, பன் விற்கும் காட்சி கண்முன் தோன்றியது என்னவோ எனக்கு அவ்வளவு உவகை தருவதாக அமையவில்லை. எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் பேசாமல் வாணியை வகுப்பறையில் விட்டு வீட்டு அலுவலகம் சென்றடைந்தேன்.

தாராவுடன் கூடமாட இருந்து ஒத்தாசை செய்ய மதியம் விடுப்பு பெற்று 1-00 மணிக்கே வீடு திரும்பி, வாணியைப் பள்ளியிலிருந்து தானே வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு, ஒரு நண்பரைக் காண அவர் அலுவலகம்வரை சென்று, அவரும் விடுப்பு எடுத்துக் கொண்டிருப்பதாக அறிந்து, அலுப்புடன் வீடுதிரும்பி, வயிறு ஏதோ கலாட்டா செய்ததில் கழிப்பறை சென்று திரும்பும்போது அந்த குறுகிய பாதையில் ஒரு பெரிய எருமைக்கன்றுக்குட்டி உள்ளிருந்து யாராவது வந்து அதை விரட்டினால்தான் உண்டு. உடலைக் குறுக்கிக்கொண்டு அதைத் தாண்டிச் செல்ல எனக்குப் போதிய தெம்பு, தைரியம், சாதுரியம் முதலியன இல்லாததாலும், ஒரு சராசரி பாரதனின் அன்றாட வாழ்க்கையில் விதி திடீர் திடீ ரென்று நேரம் காலம் தெரியாமல் விளையாடி, தன் இருப்பை நினைவூட்டும் என்பதை நான் நன்றாக அறிந்து வைத்திருப்பதாலும், ‘என்னங்க என்னங்க’ என்று பக்கத்து வீட்டுக்காரிகளை அழைப்பது அவ்வளவு தரம் வாய்ந்த செயலாகாது என்பதாலும், நான், ‘தாரா தாரா, என்று குரல் கொடுக்க, அவள் நல்லவேளையாக உடனே வந்து, நிலைமையைக் குறிப்பறிந்து, ‘சூ சூ’ என்று கத்தி, முதலையின் வாயிலிருந்து யானையின் காலைக் காப்பாற்றினாள். முரட்டுக் காளை ஒன்றை உடலெல்லாம் காயம் ஏற்படுத்திக்கொண்டு அடக்கித்தான் வெள்ளை யம்மாளை மணம் முடிக்க முடிந்தது வெள்ளையத்தேவனால்.  ஒரு கன்றுக்குட்டியிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் துப்பில்லாமல் தன் மனைவியை நோக்கி அபயக்குரல் எழுப்பும் ஒரு ஆடவனைக் கணவனாக வாய்க்கப்பெற்றதில் தாரா தலையில் அடித்துக்கொள்ளாதது குடும்ப நலம் கருதி.

மணி 5-00. உடம்பு சரியில்லாத நிலையிலும், குடித்தனக்காரர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு வெற்றிடத்தில் தாரா வாணி யின் சீருடைகளைத் துவைக்க ஆரம்பித்தாள். இது தினசரி நடக்கும் வீட்டுவேலைகளில் ஒன்று. வாணியின் கல்வி வியாபார நிறுவனம் குறிப்பிட்டிருந்த கடையில் ஒரு ஜதை மாற்றுச் சீருடைக்கான துணி வாங்கி மலிவாகக் கூலி கேட்கும் தையற்காரனிடம் தைத்துப் பெற்றுக்கொள்ள நூற்று முப்பத்தைந்து ரூபாயை சேமிக்க ஏதுவான சூழலை இன்னும் கடவுள் அருள்பாலிக்கவில்லை. தெய் வம் நின்று நிதானித்துத்தான் அந்த மாதிரி அரிய காரியங்களை யெல்லாம் செய்யும். அதன் போக்கில் அதை விட்டு விடுவது தான் உசிதம். உசிதம். நானே அன்று துவைத்திருக்கலாம். மற்ற குடித்தனக்காரர்கள் பார்வையில் நான் சிறுத்துவிடுவேன் ஆனால் வரட்டு ஜம்பம். வரும் விருந்தாளியிடம் ‘இண்ணெக்கி காலேலே தான் ஹார்லிக்ஸ் தீர்ந்தது. இவர்டெ சொன்னா இவருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கிறதில்லை இருங்க, கொஞ்சம் டீ போட்டுக் கொண்டார்ரேன்’ ‘ஒண்ணும் வேளும். இப்பொதான் heavy tiffin வர்ர வழிலே சாப்பிட்டுட்டு வர்ரேன்” சராசரி குடும்பங்களில் காசில்லாத தருணங்களில் தவறமல் நிகழும் பழ கிப் புளித்துப்போன காட்சி,

  வாணியைப் பார்த்துக்கொள்ள ஒரு தபர்எப்பொழுதும் தேவை. ஏதாவது செய்து வைப்பாள், இன்னும் சின்னவளாக இருக்கும்போது, ஒரு baby sitter. இப்பொழுது ஒரு ஆயா.   இதெல்லாம் கனவில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்தனர். அவரைத் தாக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, ‘பார்ரா எவ்ளோ ஜோராப் பறக்கறது! அந்த எருமெக்குட்ட்டிக் கன்றுக்கும் குட்டியெப் பார். சாணியிலே என்னமா வெளெயாட்றது?’ என்று புறச்சூழலின் ரம்மியத்தை வேடிக்கை காட்டிகொண்டிருந்தேன்..

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கல்யாணப் பரிசாகக் கிடைத்திருந்த மேஜை இரண்டு நாற்காலிகள் வசிக்கும் அறையின் பாகத்தை அடைத்துக் கொண்டிருந்தன: பரிசுகள் திருமணத்தின் பிரதான அனுகூலங்கள். ஒரு நாற்காலியில் அமர்ந்து இளைப் பாறிக் கொண்டிருந்தேன். பயங்கரமான சோர்வு . என் பகுதியைச் சுற்றிலும் ஒரே இரைச்சல். அதன் விளைவாக எரிச்சல்.

பக்கத்து வீட்டுக்காரிகள் காலை 7-45இலிருந்து இரவு பக்கத்து 10-30 வரை ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். பம்ப் அடிக் கும் சப்தம், குழந்தைகளின் அழுகுரல், இவர்களின் ஓயாத பேச்சுச் சப்தம், திடீர் திடீரென குலுங்கிக் கூச்சல் போட்டுச் சிரிக்கும் குதூகல ஒலி, தோராயமாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறை த் பகுதிக்காரியின் ‘குட்டிப் பையா’ என்ற காதைத் துளைக் சகும் பயங்கர இரைச்சல் (தன் 6 மாத ஆண் மகவின் மீது அவள் இரைச்சலுடன் விட்டு விட்டு அன்பு செலுத்திக் கொண்டிருந் தாள் ஒரு 6 மாதச் சிசுவை அழைக்க அவ்வளவு பெரிய அன் புக் கூச்சல் அவசியமா என்று தெரியவில்லை.) சில சமயம் ஐந் தாவது பகுதியிலிருந்து முழுதாகத் திருகிவிடப்பட்டிருக்கும் வானொலியிலிருந்து இரைச்சலுடன் காதில் விழுந்துவைக்கும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இத்தியாதி, பழைய ஹிந்திப் பாடல்கள் சாஸ்த்ரீய சங்கீத் இதுவரை காதில் விழுந்ததாக நினைவில்லை. இரவலில் இனிமைகளை எதிர்பார்ப்பது சரிதானா என்று தெரிய வில்லை. மேலும். இரவல் என்பது யாசகம்; ஒரு இழி நிலை. வீட் டில் அடிக்கடி திரும்பத் திரும்ப நிகழும் சம்பாஷணை : ‘மொதல்லெ வீட்டுக்கு ஒரு ட்யூப் லைட் வாங்கணும், பிறகு ஒரு சின்ன டிரான் சிஸ்டர், அதுக்கப்புறம் ஒரு குட்டி டி. வி- ட்ரான்ஸிஸ்டர் இல்லாமெ   இருக்கு,  தலையே வெடிச்சிடும் போல இருக்கு, ” அதுக்கும் மொதல்லெ ஒரு கட்டில். ஒரு பீரோ, அதெல்லாம் எப்படி மறந்துச்சு ஒனக்கு ? காதணிகள் அடகுக் கடையில் இருப்பதை ‘ மறந்த மயக்க நிலையில் சுபீட்சம்பற்றிய இனிய சிந்தனைகள். ‘இதெல் லாம் வந்ததுக்கப்பறம் ஒரு சொந்த வீடு, சிம்ப்ளா ஒரு சின்ன கார்.   ‘ஆசைகளுக்கு அளவே இல்லை. ஆசைகள் அனைத்தும் .உய துன்பத்துக்கு அடிகோலும். நான் சொல்லறது தப்புன்னா, புத்தரைக் கேள்..  வசதிபடைக்காதவனுக்கு வசதியாகக் கைவசம் ஒரு  கௌதமர்.

..

இரைச்சலுக்கு நடுவே எனக்கு ஒன்று தோன்றியது. பேச்சைத் திறமையுடனும் செவ்வனேயும் வெளிப்படுத்த இவர்கள் கற்றிருந்தால் எவ்வளவோ சாதனைகள் புரிந்திருக்கலாம். வாக்குச் சாதுரியமுள்ளவனின் இடது காலடியில் பாதி உலகமும் வலது காலடியில் மீதி உலகமும் கிடக்கிறது. இது உலகியல்,

வாழ்க்கையை ஒரு சில வாக்கியங்களில் அடக்கிவிடலாம். இவ்வளவு பேச்சு அவசியம்தான என்று தெரியவில்லை. மிகவும் ஆழமான உறவுகள் அநேகமாக அமைதியாகவே இருக்கும். நேசத்தையும், மென்மை உணர்வுகளையும், தோழமையையும் வெளிப்படுத்த இனிய முகபாவம் மட்டும் போதுமானதே. வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளாமலேயே ஒருவருடைய எண்ணங்கள் மற்றவரைச் சேர்ந்தடையும். வாழ்க்கை மிகவும் நிசப்தமாக இருப்பதற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனாலும் இரைச்சல் ஏனோ எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அன்றாட இரைச்சல், தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்வதில் ஏற்பட்ட சலிப்பு- எல்லாவற்றையும் விட்டு ஓடி வடக்கில் ஏதோ ஒரு ஆஸ்ரமத்தில் அமைதியான சூழலில் எஞ்சியிருக்கும் வாழ்நாளைக் கழித்தால்…………… கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள்ளேயே ஒரு இரைச்சல் ஆரம்பமாகியது.    வாணிக்கு உடனே  நான் வெளியில் அழைத்துக் கொண்டு போகவேண்டுமாம். 5-45 ஆகியும் பால்காரர் இன்னும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததால் எனக்கு டீ கிடைக்காததில் நிலைகொள்ளாமை.   உளப் பூசல் புகைந்த நிலையில் இணக்கமாக வாணியிடம் சொல்லிப் பார்த்தும் அவள் வீம்பு பிடித்து பயங்கரக் கூச்சலுடன் அழ ஆரம்பித்ததில், எரிச்சல் உச்ச கட் டத்தை அடைய, வெறி பிடித்த நிலையில் அவள் முதுகில் கையை ஓங்கி அடித்துவிட்டேன்.  க்ஷணப் பொழுதில் பாண்ட் மாட்டிக்கொண்டு வெளியே விரைந்தேன். எங்கேயாவது சுற்றி விட்டு, இரைச்சல் அடங்கிய பிறகு 11-00 மணி வாக்கில்  வீடு திரும்பி படுக்கையில் கிடந்தால் அடுத்த நாள் காலை வரை அமைதியை ஆனந்திக்கலாம்.

வழியில் தென்பட்ட முதல் கடையில்  சாப்பிட்டுக்கொன்டிருக்கையில் மனம் நெகிழ்ந்து விட்டது. இதுவரை கையைக்  நீட்டி அடிக்காதவனுக்கு அன்று என்ன ஆகிவிட்டது.   அடித்த கையை வெட்டி எறிந்தால் தேவலாம் போல் இருந்தது. உணர்ச்சிவசப்பட்டிருக்கும்போது இந்த மாதிரி ஏடாகூடமாக ஏதாவது செய்யத் தோன்றும். ஒரு புது ப்ளேடை எடுத்து அதை வலது கையில் பிடித்துக்கொண்டு இடதுகை சுண்டு விரலில் ஒரு சிறு கீறலை ஏற்படுத்த எவனாலும் முடியப்போவதில்லை, ஆனால் சூளுரைக்கும்போது தனது காதுகளில் ஒன்றை அறுத்துக்கொள்வதாக யார்தான் இரையாமல் இருக்கிறார்கள்! எல்லாம் போதையின் உளறல்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதற்கும் போதையில் உளறுவதற்கும் அதிக வித்தியாசம் இல்லை இப்பொழுது முதலில் பிராயச்சித்தமாக ஏதாவது செய்தாக வேண்டும். உடனே வீடு திரும்பி  வாணியை அழைத்துக்கொண்டு  ஒரு walk சென்றால்தான் மனம் சாந்தியடையும். பிறருக்குச் செய்யும் நல்ல காரியங்கள், உபகாரங்கள் முதலியன மனித நேயத்தின் வெளிப்பாடுகளாகத் தோன்றினாலும் அடிப்படையில் ஒருவித பயங் கர சுயநலம். நம் மனதைச் சாந்தமாக வைத்துக்கொள்ள நாம் செய்து கொள்ளும் சுயசேவைள்க. எது எப்படியோ, ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினேன்.நினைப்பது நடக்காததில் வெறுப்பு, இல்லை அதுவும் தவறு, ஏமாற்றம். அழுது அழுது வாணி தூங்கிப் போயிருந்தாள். நான் வளர்க்கும் குழந்தை; ஒரு குட்டி சினேகிதி.

  நான் தரையில் அமர்ந்திருக்கும்போது பின்னாலிருந்து என் தோள் பட்டை மீது ஏறி என் தலைமுடியைப் பற்றி கீழே குதிக்கும்போ தும், lolly pop சாப்பிட்டு என் முகத்தில் இனிப்புப் பிசுபிசுப்பைத் தடவும்போதும்   என்னுடன் ரஜினி சண்டை போடும்போதும் ,  அதன் தொடர்ச்சியாக டிஷும் டிஷும் என்று வயிற்றில் என்னை எட்டி உதைக்கும் போதும், புதிதாக அப்பொழுதுதான் அணிந்த பாண்டில் தன் செருப்புக்கால்களை வைத்துக் கரையேற்படுத்தும் போதும், அவள் செயல்களைக் கண்டிக்காமல் அமைதியாக சந்தோஷத்துடனேயே ஏற்றுக்கொள்ளும் எனக்கு ஏன் இந்தத் திடீர் ஆத்திரம்? சுய நிந்தனையில் உழன்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தேன். இரட்டையாக மடித்துப் போடப்பட்டிருந்த தாராவின் பழைய புடவையின் மீது உறையில்லாத தலையணையில் வாணி படுத்திருந்தாள். அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்கள் லேசாகப் பனித்தன. மேலே மின்விசிறி சுற்றிக்கொண்டி ருந்தது. வெயிலின் உக்கிரம் உள்ளேயும் வந்து பகல் பொழுதில்  அடுப்பங்கரை உஷ்ணச் சூழலை ஏற்படுத்திக்   கொண்டும், மாலை 6-00 மணியிலிருந்து காலை 7-00 வரை கொசுக்கள் சுதந்திரமாக பறந்து வளையவந்தும் கொண்டிருக்கும் ஒரு அறையில் ஒரு மின் விசிறி இருப்பது ஆடம்பரமா என்று தெரிய வில்லை   . தூக்கத்தில் வாணியின் கால்கள் ஒரு முறை லேசாக  அசைந்தன. முகத்தில் இரு முறை விசும்பல். அவளையே பார்த்துக் கொண்டு பிரமை பிடித்தவன்போல் உட்கார்ந்திருந்தேன்.

அதிகாலையில் வாணியை எழுப்பிக் கடற்கரைவரை அழைத்துச் சென்றால்தான் எனக்கு நிம்மதி. எது காலதாமதமாக வழங்கப் படுகிறதோ அது மறுக்கப்பட்ட சமாச்சாரம்தான், நியாயத்தைப்

போல. என் மனதை ஆசுவாசப் படுத்திக்கொள்ள அவளை கூட்டிக்கொண்டு

போக வேண்டும். எவ்வளவு விரைவில் சாத்தியமோ அவ்வளவு சீக்கிரம் waik காலை 5-30க்கு அலாரம் அடித்ததில் விழிப்பு வந்தது. வழக் கத்துக்கு முற்றிலும் மாருக கனத்த மழை பெய்து கொண்டிருந்தது, மனதை துக்கம் கவ்விக்கொண்டது.

கோபிகிருஷ்ணன்/இனிமையான வக்கிரம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “கோபிகிருஷ்ணன்/ஒவ்வாத உணர்வுகள்”

Comments are closed.