மாலன்/கனவு ராஜ்யம்
பீரங்கிச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன். இந்தியானாவே அதிர்ந்து குலுங்குவது போல் முழங்கியது பீரங்கி. ஆனிக் காற்று ஆடையை உருவிக் கொண்டு போய்விடாமல் வேட்டியை வழித்துக் காலிடுக்கில் கவ்விக் கொண்டு இந்தியானா கப்பலிலிருந்து எதிரே தெரிந்த தீவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். …
>>