எல்.ரகோத்தமன்/நாணயங்கள்

பூவோ தலையோ!யாருக்கு எதுவானால் என்ன! நான் சுண்டிவிட்டநாணயம் இன்னும்கீழே வந்து சேரவில்லை! நீ சுண்டிவிட்டதும்இன்னும் தரையைத் தொடவில்லை! யார் சுண்டிவிட்டதும்கீழே விழவில்லை! சுண்டிவிட்ட நாணயங்கள்கீழே வந்து சேருமுன்னேவெற்றி எனக்கெனக் கொண்டாட்டம்! வெற்றியின் சங்கு முழங்குமுன்னேமூண்டுவிட்டது யுத்தம்! நாணயங்கள்தலையிழந்தனபூவுமிழந்தன! அந்தரத்தில் நின்றநாணயங்கள் யுத்தத்தைஇயக்கிக்கொண்டிருந்தது! …

>>

ஒத்துழைத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்

ஒரு காலத்தில் பிளாக்கி மற்றும் பிரவுனி என்ற இரண்டு ஆண் ஆடுகள் இருந்தன. அவை இரண்டும் பரம எதிரிகளாக இருந்தன. ஒரு நாள், அவை ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தன. இரண்டும் எதிரெதிர் திசைகளிலிருந்து வந்தன. பாலத்தின் நடுவில் அவை நேருக்கு …

>>

புதுமைப்பித்தன்/ செல்லம்மாள்

செல்லம்மாள் – 1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து …

>>

ChatGPt/”குரங்கின் ஆசை”

ஒரு கிராமத்தில் ஒரு குறும்புக்காரக் குரங்கு வாழ்ந்து வந்தது.அது தினமும் வீடுகளைச் சுற்றி விளையாடும்.ஒரு நாள் ஒரு வீட்டின் கொடியில் துணிகள் காயவைக்கப்பட்டிருந்தன.அங்கே ஒரு சிவப்பு நிற சட்டை தொங்கிக் கொண்டிருந்தது.அந்தச் சட்டையைப் பார்த்த குரங்கிற்கு ஆசை வந்தது.மனிதனைப் போலச் சட்டை …

>>

அழகியசிங்கர்/மூன்று பெண்மணிகள்

வழக்கம்போல் 3 பேர்களும் கடற்கரையில் வந்து கொண்டிருந்தார்கள்.கடலை ஒட்டிய கிராமத்தில் அவர்களுக்குப் பணி. அதை முடித்துவிட்டு அவர்கள் இருப்பிடத்திற்கு வர வேண்டுமென்றால் கடற்கரையோடுதான் வர வேண்டும்.வரும்போது கடற்கரையில் காணப்படும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டு வருவார்கள். அதை விற்று வரும் தொகையைச் சமமாகப் …

>>

நாபா.மீரா/ஓய்வு

ஏண்டி அன்னம், ஏன் உம்முகம் ரொம்பச் சோர்வாத் தெரியுது, கேட்ட வீரம்மாவுக்கு பதில் சொல்லாமல் தன்னிச்சையாக நிமிர்ந்தும், மடிந்தும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் கடல் அலைகளை வெறித்தபடி நின்றிருந்தாள் அன்னக்கொடி.அடுத்த மாசம் நமக்குப் பணி ஓய்வு. அதுக்கப்புறம் இப்படி தெனமும் பார்க்க முடியுமான்னு …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!

லதா காலையிலிருந்து ஒரே பரபரப்பு.தென்காசியிலிருந்து மாமியார் வரப்போகிறார் என்பதால் சற்று கூட ஓயாது வேலை.நேற்று இரவே துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போட்டுத் தோய்த்துமொட்டை மாடியில் காயப் போட்டு விட்டாள்.லதாவின் இரண்டு செட், கணவன் குமாரின் இரண்டு செட், மகன் தீபக்கின் …

>>

அழகியசிங்கர்/நீலாவும் குரங்கும்

நீலா மாடிக்கு வரும்போது எப்போதும் பார்க்கும் அந்தக் குரங்கு கொடியில் சட்டையை மாட்டத் தயாராக இருந்தது.இதைப் பார்த்த நீலா ஆச்சரியப்பட்டாள். குரங்கு எல்லா உதவிகளையும் செய்தன. வாளியில் இருந்த துணிகளைத் கொடியில் உலர்த்தின.ஆச்சரியப்பட்டாள் நீலா. தெருவில் உள்ள எல்லாருக்கும் குரங்கின் செய்கையைக் …

>>

கோபாலகிருஷ்ணன்/விபரீதம்

“லட்ச ரூபாய்க்கு ஆசைப் பட்டது விபரீதமாகப் போனதே “ராணி கவலைப் பட்டாள்.அவள் சினேகிதி ராஜி யின் கணவர் விஞ்ஞானி. மனிதனை மிருகமாக மாற்றும் மாத்திரை கண்டு பிடித்திருந்தார். மீண்டும் மனிதனாக மாற்றும் மாத்திரை ஆராய்ச்சியில்.“லட்ச ரூபாய் தருகிறேன். அந்த மாத்திரையை உன் …

>>

ஞானக்கூத்தன்/ பயம்

பறவைகள் கூச்சல் எழுப்பும் முன்பேவீட்டை விட்டுப் புறப்பட்டிருக்க வேண்டும்என்னைத் தேடி வந்த அவர்கள்நன்றாக ஆடை அணிந்திருந்தார்கள்நெடுந்தூரம் பயணம் செய்த களைப்புடன்தமக்குள் நானாவித மொழிகள் பேசினார்கள்உள்ளே வரும்படி அவர்களை அழைத்தேன்அவர்கள் யாரிடமும் ஆயுதம் இல்லை என்பதுபயத்தின் அளவைப் பாதி குறைத்ததுவீட்டைச் சுற்று முற்றும் …

>>

எதிலும் அளவுக்கு மீறினால் தீமையே

ஒரு கிராமத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு குறும்புக்காரக் குரங்கு வாழ்ந்து வந்தது. அதற்குப் பசி எடுத்தாலெல்லாம் அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று, சிறு குழந்தைகளிடமிருந்து உணவைப் பறித்துச் சாப்பிடும். சில நேரங்களில் யாருடைய வீட்டின் சமையலறைக்குள் நுழைந்து, பொருட்களைச் சிதறடித்து, …

>>

அதிரன்/கிணறு

மொட்டை மாடியிலிருந்து பார்த்தால்பின் வீட்டுக் கொல்லைப்புறம் தெரியும்.பழைய கிணறு.அதன் அருகேஒரு துணி துவைக்கும் கல். பெரும்பாலான நாட்களில்அதன் மீதே அமர்ந்திருப்பாள்அந்தப் பாட்டி. எதிரில் யாரோ இருப்பதுபோல்கைகளை வீசிகோபமாகப் பேசுவாள். அவள் பேச்சில்குற்றச்சாட்டுகள்.முடிவில்லாத கேள்விகள். யாராவது வந்துவிட்டால் மட்டும்ஒன்றும் நடக்காததுபோல்அமைதியாகிவிடுவாள். கொஞ்ச நாட்களாகஅவளைக் …

>>

வளவ. துரையன்/அவசியம் சந்திப்போம்

போய் வருகிறோம்இணையாய் வந்தோம்சிறு குடும்பமாய்ச் செல்கிறோம்; இனிமேல் இங்கேசூரியக் கதிர்கள்தாம்சுட்டெரிக்கும்; பலமாய் இடி இடிக்கும்பருவமழை வாராதுமரங்களெலாம் வ்பட்டுப் போனபின்வசிக்க இடமேது?போய் வருகிறோம் இங்கிருக்கும் இனியமரக்கிளைகளில்தாம்ஊஞ்சலாடினோம்ஊடல் கொண்டோம்உணர்வு கலந்தோம் எம்வாரிசுகளும்எழுந்து நின்றுப் பழகவும்எழிலாகப் பறக்கவும் கற்றார்கள்;போய் வருகிறோம் எழிலாக அசையும் மரமே!எங்கும் நிறைந்துள்ளஎங்கள்செடிகொடிகளே!பூந்தோட்டங்களே!பொங்கி …

>>

தங்கேஸ்/வலி

வலிகளில் பலவகைகள்எண்ணினால் ஏராளம்ஞாபகத்திற்கு வரும் ஊசி குத்துவது போலசுருக் சுருக்கென்று குத்துவதுஒரு வகை நரம்பு தெறிப்பது போலவிண் விண்ணென்று தெறிப்பதுமற்றொரு வகை பறை அதிர்வது போலடம் டம்மென்று அதிர்வதுவேறொரு வகை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டுகுத்தி கிழிக்கும் வலிஒரு வகை யென்றால் உயிரோடு …

>>

கு. ப. ரா/ ராஜேந்திரன் கனவு

ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று மாலை சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன், தன் புதிய தலைநகர் கங்கைகொண்ட சோபுரத்து அரண்மனையின் உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பக்கத்தில் அவருடைய சகோதரி வேங்கி நாட்டு அரசி குந்தவை உட்கார்ந்துகொண்டு சக்கரவர்த்தியின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.ராஜந்திர சோழனுக்கு …

>>

வனஜா/தந்தையர் தினம்

தந்தையர் தினசிறப்புக்குஅப்பா என்பவர்குடும்பத்தில்முக்கியம். ஆனால்அவர் நாடகத்தில்வருவது போல்அப்பப்ப தலைகாட்டுவார்.பெண் குழந்தைகளுக்குமுதலில் அப்பாதான். எல்லாம். அம்மா .கிட்ட ஏதாவதுகேட்க வேண்டும்என்றால் அப்பாசிபாரிசு தான்முக்கியம். ஒருமனிதனுக்கு இரண்டு கைகள்இரண்டு கால்கள்இரண்டு கண்கள் என்று இரண்டும்போல் அம்மாஅப்பா இரண்டு பேரும் சரிசமம். .அறிவுக்குத் தந்தைஅன்புக்கு அம்மா.கண்டிப்புக்கு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 158

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 158 – இன்று – (26.06.2026) மாலை 6.30 மணிக்கு இரண்டு கு.ப.ராக்கதைகள் எடுத்துப் பேசினார்கள். சிறப்பாக நடந்து முடிந்தது கூட்டம். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கனகாம்பரம் என்ற கதையை …

>>

ஒரு எதிரியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதே

ஒரு காட்டில் ஒரு பாம்பு வாழ்ந்து வந்தது. அது பறவைகளின் முட்டைகள், எலிகள், தவளைகள், முயல்களின் குட்டிகள் மற்றும் பிற சிறிய உயிரினங்களை உணவாக உண்டு வாழ்ந்தது. அது மிகவும் சோம்பேறியாக இருந்ததால், கொழுத்தும் பருத்தும் ஆன பாம்பாக மாறியது. அது …

>>

ஜெயகாந்தன்/தேவன் வருவாரா?

பொழுது சாய்ந்து வெகுநேரமாகிவிட்டது கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோ ரும் வீடு திரும்பிவிட்டார்கள். இன்னும் அழகம்மாளைமட்டும் காணவில்லை.குடிசைக்குள்—தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில்-அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வெளியே …

>>

கு. ப. ரா./தாயாரின் திருப்தி

பங்குனி மாசத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட வாயைத் திறந்துகொண்டு மௌனமாக மரங்களில் உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காகப் பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு …

>>

ஷைலஜா/கண்ணதாசன் பிறந்தநாளுக்காக

கிண்ணத்தின் வண்ணத்தில் மக்கள்எண்ணத்தைத்தொட்டாய்! சித்தத்தின் சத்தத்தில் கவிதைமுத்துக்களை இறைத்தாய்! பூவுக்குள் தேன் போலப் படைத்தபாட்டுக்குள் நின்றாய் ஒருநாள்காட்டுக்குக்கண்ணம்மாபேட்டைக்குப்போய்விட்டாய்! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டாற்போல் நீ திரைமெட்டுக்கு பண் சுமந்துபுகழடிகள் பல பட்டாய்! தமிழ்த்தாய் உன் நாவில்தளிர்நடனம் ஆடி நின்றாள்.அமிழ்தான உன் கவிதைஅத்தனையும் …

>>

கு. ப. ரா./கனகாம்பரம்

1“மணி!” என்று வாசலில் நின்றுகொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.“எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?” என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.மணியும் அவனும் கலாசாலையில் …

>>

அப்பாவின் நினைவில்…./ஜெ.பாஸ்கரன்

40 வருடங்களுக்கு முன்னால் ஒரு காலை…. என் கன்ஸல்டிங் ரூமில் அமர்ந்து, நோயாளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எட்ட நின்று யாரோ என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு – ஸ்டெத்தைக் காதிலிருந்து கழற்றி, தலை நிமிர்ந்து, அறை வாயிலைப் பார்த்தேன். புன்னகையுடன், கண்கள் …

>>

ரேவதி பாலு/கதர் வேட்டியும் அப்பாவும்

எங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளாகவே அப்பா கதர் வேஷ்டி கதர் ஜிப்பா போட்டுண்டு தான் பார்த்திருக்கோம். அலுவலகத்திற்கும் வேட்டி ஜிப்பாவில் தான் போவார். சிறந்த தேசபக்தர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார். ஒரு நாலு செட் கதர் வேட்டி …

>>

கேள்விக்காரன்/அப்பா

எனும் மூன்றெழுத்துஎன்னில்தாய் சூட்டியபெயரெழுத்து அப்பாவெள்ளை வெளேர்தும்பைப் பூபாபபுலின் காமராஜர்நீள அங்கிஅரைக்கைச் சட்டையும்அரையில்நாலு முழ வேட்டியும்அணிந்தசொற் சிக்கனன் இட்லி உப்புமாநேசன்பிள்ளைகள்குடும்ப நேசனும் துள்ளி ஏறும்சாகஸசைக்கிள் ஓட்டி அப்பாவின்வெளி உள்சட்டைப் பையில்அகிலம்அடைக்கலாம் விழிப்புஉழைப்பில்பறவைகளினஉறவினர் அவர் அப்பாஅலுவலகம்செல்லும் போதும்விடை பெறுவதில்லைதன் இறுதிவிடையின் போதும்ஆர்பாட்டம்ஆர்ப்பரிப்பின்றிசன்னமாகதன்னுயிர் நீத்தார் அப்பாவுக்குஏன் …

>>

கிரிஜா ராகவன்/நடந்து நடந்து கடந்த வாழ்க்கை

நினைத்துப் பார்க்கிறேன்நான் நடந்த கதையைநடந்து கடந்த வாழ்க்கைநன்றாகத்தான் செல்கிறது முத்தாய்ப் பிறந்த என்னைஆறே மாதத்தில் ஆசையுடன்வயிற்றின் மேல் நிற்க வைத்துஅழகு பார்த்த அம்மா எழுந்து நின்ற பின்பும்தடுமாறிய கால்களுக்குபாதம் அழுத்தி நடப்பதற்குபயிற்சி கொடுத்த பாட்டி சுவர் பிடித்து நடந்து பின்விழுந்து எழுந்து …

>>

அழகியசிங்கர்/அப்பா

90 வயதுவரைவாழ்ந்தவர் அப்பாதனியாய் ஒரு அறையில் பல மாதங்கள் படுத்தேகிடந்தார் அடிக்கடிஎன்னைக் கூப்பிடுவார்இரவு நேரம்கூப்பிடுவது அவர் வழக்கம் என் கைகளைப்பிடித்துசிறிது நேரம்தன் கைகளோடுவைத்துக் கொள்வார் அந்தப் பரிசமே போதும் ஓராயிரம் அர்த்தம் சொல்லும்

>>

‘ ஜி.பி.சதுர்புஜன்’/அப்பாவின் நினைவுகள்

அப்பா உன் எளிமை எண்ணி உருகுகின்றேன்_உன்வாழ்க்கை தந்த பாடங்களை எண்ணுகின்றேன்!பக்கத்தில் இருந்திடினும் உன் அருமைகளைபல வருடம் போனபின் தான் நான் அறியலுற்றேன்! இரண்டு வேட்டி இரண்டு சட்டை உனக்குப் போதுமே!துண்டு ஒன்று இருந்துவிட்டால் துணைக்குப் போதுமே!பாண்ட்டு சட்டை ஷீசாக்ஸ் வெறுத்தொதுக்கினாய்!எளிமையின் இலக்கணமாய் …

>>

அனுராதா ஜெயசங்கர்/அம்மா வந்தாள்

அலுவலகத்தில் தணிக்கை காரணமாகக் கடுமையான வேலைப்பளு, கணவரின் அலுவல் நிமித்த தொடர் சுற்றுப்பயணங்களால் ஏற்பட்ட பிரிவுத் துயர், இரட்டை ஆண் குழந்தைகளின் சேட்டைகளைச் சமாளிக்கும் அயர்ச்சி எல்லாமாகச் சேர்ந்து வித்யா தன் மொத்த சக்தியும் வடிந்தது போல உணர்ந்தாள். இரண்டு நாட்கள் …

>>

ஷைலஜா/அப்பாவின் பட்டுவேஷ்டி

(21.ஜூன் தந்தையர் தினத்திற்கு) அப்பாவின் பட்டுவேஷ்டிமீதுஅண்ணனுக்கு ஒருகண்தம்பிக்கு இரண்டு கண்பெண்ணானஎனக்கும்அதன் மீதானபார்வையைக்கண்டுஅம்மா சிரிப்பாள். அடர்த்தியானபச்சைநிறத்தில்அன்னப்பறவைகள்அணிவகுக்கஅகலஜரிகை கரையிட்ட பளபளக்கும் பட்டுவேஷ்டியைதாவணியாய் அணிந்துகொள்ளதணியாத ஆசை இருந்தது. சுபநாட்களில்கல்யாணப்பந்தலில்அப்பாவின் பட்டுவேஷ்டிஅவரது மேனியில்அமர்க்களமாய் ஜொலிக்கும். திருபுவனம்பட்டாம்! ’ஆளழகா துப்படிக்காரா என்பதுபோல இன்றுசெல்வநிலை அதிகமில்லாத என்னைபட்டுவேஷ்டி பணக்காரனாக்குகிறது’என்று சொல்லி …

>>

அதிரன்/மறி

வழக்கமான பாதைஇல்லையென்றாலும்நம்பிக்கையுடன்தலையை ஆட்டி ஆட்டிபின் தொடர்ந்தது ஐந்து வருடங்களுக்கு முன்மகள் ஆசைப்பட்டதால்வீட்டுக்குள் வந்தது எப்பொழுதும்ஏதாவது குரலெழுப்பிஒட்டுபவன்நாளைக்குள் பணம்கட்டவில்லையென்றால்வீட்டுக்கு அனுப்பிவிடுவதாகமகளின் சிறுத்த குரல்காதில் ஒலிக்கஇன்றுமௌனம் காத்தான் சந்தையின் சலசலப்பில்சற்று மிரண்டது கயிறு கைமாறும் வரைஒன்றும் அறியாத ஜீவன்நாலு கால்களையும்தரையில் ஊன்றிவர மறுத்தது கடைசியில்லாரியில் …

>>

நேசத்தின் விலை / ஸ்ரீராம்

அதிசயமாக ஆசைப்பட்டு கடற்கரைக்கு வந்த பாவம், நேத்து ராத்திரி சுந்தரி தொலச்ச மோதிரத்தை இன்னிக்கு காலைல வேலைக்குப் போகும் முன்னால தேடி எடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையில் வந்து இருக்காங்க பானு சரசு சுந்தரி மூணு பேரும்.” கவனமா இருந்திருக்கக் கூடாதா …

>>

ஷைலஜா/மூன்று ரத்தினங்கள்

“இங்கதானே இதே நாளுல நாம நம்ம மூணு புள்ளங்களையும் பறிகொடுத்தோம்..இன்னிக்கு இருபத்திரண்டுவருசமாச்சி.. இருந்திருந்தாநம்ம குளந்தங்களுக்கு முப்பது வயசுக்குமேல ஆகிகண்ணாலம் காட்சில்லாம் நடந்திருக்கும்”ராமாயி தவிப்போடு சொல்ல,” ஆமா…இதே கடலுகரையில் வெளயாடிட்டு இருந்த உன் மவன், இந்த வேலாயி மவ, என மவன்ன்னு அல்லாரயும் …

>>

மரு. ச. கந்தசாமி/சிப்பிக்குள் முத்து

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொன்னாலும் சொன்னாங்க நாம் இந்தக் கடல் தாயை நம்பி தினமும் சிற்பி பொறுக்குககிறோம்” என்று மூன்று பேரும் புலம்பினர். ராக்காயி, மீனம்மா, பூவாயி மூன்று பேரும் ஊருக்குள் நிலம் நீர் காய்ந்து போக, தினமும் கடற்கரையோரம் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 157/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 157 – வெள்ளி மாலை (19.06.2026) 6.30 மணிக்கு 8 பெண் எழுத்தாளர்கள்ஒவ்வொருவரும் அவரவர் கதைகளை எடுத்துப் பேசி உள்ளார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். கூட்டத்தை வழி நடத்துபவர் : …

>>

கேள்விக்காரன்…/கவிதை எழுத வேண்டும்

எனக்குக்.கவிதை எழுதவேண்டும் காணும்கேட்கும்விஷயங்களைஎல்லாம்கவிதையில்சொல்ல வேண்டும்என்ற பேரவா சிலவகைசொல் வடிவம்பெறுகின்றன பலவகைசிந்தனையிலேயேசிதைந்துபோகின்றன எழுதாதகவிதைகளேமிகச் சிறந்தகவிதைகளாம் எழுதும் கவிதைகள்என்னதவிட்டுப் பிள்ளையோ நீங்கள்என்ன பெயர்சூட்டினாலும்எனக்கென்னஆயிற்று?! என்னுள்ளேகவிதைகள்எப்போதும்அடிமுடிஅறியாஎல்லையில்லாதுவளர்ந்து கொண்டேசெல்லும்எறும்புப் படையாய்புதிர்த் தோற்றஎறும்புப் புற்றாய்! 16/06/26மாலை மணி:06:04

>>

அ.முத்துலிங்கம்/கனடா வாழ்க்கை

கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையிலிருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை . கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்குக் கனடாவில் இவ்வளவு மரியாதை இருப்பது எனக்கு அன்றுவரை தெரியாது. எந்த அங்காடியிலோ, சந்தையிலோ, கடையிலோ என்ன …

>>

வைரமனம் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

செண்பகம் அந்த அழகிய கடற்கரை அருகில் உள்ள விடுதியில் தூய்மைப் பணி செய்கிறாள்.அருகில் உள்ள குப்பத்திலிருக்கும் இவள் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில்தான் அந்த விடுதி.அன்று காலை எழுந்திருக்கும்போதே பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் சுமதி, தனக்கு ஏதோ நோட்டுப் புத்தகம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/கடலோரத்து மனுசிகள்..!

பல தசாப்தங்களாக, கடல் அவர்களுக்கு வாழ்வாதாரமாகவும். உறவுகளைக் காவுவாங்கிய குடும்ப எதிரியாகவும் இருந்தது.இன்றும் பௌர்ணமியாதலால்.. அலைகள் ஒரு அமைதியற்ற, எச்சரிக்கும் தாளத்துடன் கரையில் மோதின.சுனாமிக்கு கணவனைப் பறிகொடுத்தவளும், ஆழ்கடல் புயலுக்கு தமையனை வாரிக் கொடுத்தவளும், எல்லை தாண்டினானென அண்டை நாட்டுக்குப் பிள்ளையைப் …

>>

சங்கர் ஜோதிராஜ்/சுவாமிராமதாஸ்அருளியக்கதைகள்

ஒரு மனிதர் பூதம் ஒன்றை வரவழைத்துத் தான் விரும்புவதை எல்லாம் அதைச் செய்யவைக்க வேண்டும் என்று விரும்பி அதற்குத் தேவையான சாதனைகளில் ஈடுபட்டார். சில மந்திரங்களின் சக்தியினால், அவரால் பூதத்தைத் தன் முன்னால் வரவழைக்க முடிந்தது. பூதமும் அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து …

>>

அழகியசிங்கர்/தகர டப்பா கவிதை

தினமும்கவிதை எழுத நினைப்பதுண்டு எதைப் பற்றி எழுத வேண்டுமென்று எண்ணம் ஏற்படும் கவிதை என்றால் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்ஆனால் யாரும் அப்படி எழுதுவதில்லை ஒரே மாதிரி தகர டப்பா கவிதைதான் எழுதுகிறார்கள் நானும் அப்படி எழுதக்கூடாதென்று நினைக்கிறேன்

>>

அகல் சுடரும் அறப்பயணமும்…- ரவிசுப்பிரமணியன்

வறுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந்தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர். இவரது வாழ்வு சராசரி வாழ்க்கையன்று; அறத்தின் வழியே நன்மைகளை விதைத்துக்கொண்டிருக்கும் ஒரு நெடும் பயணம். இயற்கையோடு …

>>

மாலா மாதவன்/உழைப்பின் நிறம் சிவப்பு

“அடி ஆத்தீ! இதென்ன கிளிஞ்சல்லாம் ரத்தம் பூத்தாப்புல கெடக்கு?” பழனியின் பின் வந்த ராக்கம்மா சத்தமிட்டாள்.“அடிப் பழனி! உன் கால் ரத்தம் தானாத்தா! பாத்து வரக்கூடாதா? நமக்கெல்லாம் ஒரு செருப்பு வாய்க்குதா பாரு? போ! போய் அங்கிட்டு உட்காரு. உனக்கான கிளிஞ்சல்களை …

>>

கோபாலகிருஷ்ணன்/சுனாமி அலைகள்

2004 சுனாமி அலைகள் அவர்கள் குடும்பத்தையே விழுங்கியும் பசி தீராத கொடுமை. ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வ‌ந்து பார்க்கும் தாய்க்குலம். மறைந்தவர்கள் மண்ணிலிருந்து மீண்டு வருவார்களா என்ற ஏக்கம். அது நடக்காது என்று அறிவுக்கு தெரியும். ஆனால் மனது கேட்கமாட்டேன் என்கிறது.தேடல் …

>>

ஆர்க்கே…!/நகர்வல நாட்கள்…!

பேசக்கூட காசு கேட்பாய்போலஎன்போர்கள்கூடதன்னிச்சையாயென்னுடன்பேசிய நாட்கள் குறைவு.வெத்தலை பாக்கு வைத்துஅழைத்தால்தான்எங்கள் வீட்டுக்குன் விஜயமோஎனக் கேள்வி எய்வோர்ஒருமுறைகூட என் வீடு வந்துகுசலோபரி கேட்டதில்லை..!பெரிய ஆளாய்ட்டப்பா…நாங்கள்ளாம் ஞாபகம் வருதாஎன்போர்களின் ஏளனத்தூடேஎன்னை உதிர்த்துவிட்டஅவர்களின்சந்திப்பு விருந்துகள்படங்கள் சேதிகளாய்ஊடகப் பதிவாகையில்நானெங்கிருக்கிறேன்என்பது தேடாமலேயேதெளிவாகும் பலசமயம்..!ஒரு தடவைமணியடித்துஉயிர்ப்பித்து மரித்த அழைப்பைஓராயிரம் மிஸ்டு கால்களுக்கீடாய்கணக்கிட்டு …

>>

அதிரன்/அடையாளம்

புழக்கடையில் புதராய்மண்டி கிடக்கும்புற்களை அகற்றகிராமத்திலிருந்துவந்திருந்தார்வயதான பெரியவர் வந்தவர் ஒரு மருத்துவன்போல் புதரைச் சுற்றி சுற்றிபார்த்துக் கூலியைமுடிவு செய்துகொண்டார் பேரம் மத்தியத்திற்குவந்தபின்உடைகளை மாற்றிவேலையைத் தொடங்கினார் அப்பொழுதுதான்கவனிக்கிறேன்அவரது இரண்டு பாதங்களின்விரல்கள் அனைத்தும்ஒன்றே ஒன்று நெருக்கிபூமியை இறுககவ்விக்கொள்வது போல்அமைந்திருப்பதை உள்ளங்கைகள்ஏதோ ஒரு கருவியைபிடித்திருக்கும் பாவனையில்உள்மடிந்தேவாறே இருப்பதையும் …

>>

அதிரன்/காணும் வரை

கண்ணாடி சில்லுகள் பதித்தஅந்த மதில் சுவரைபூனை ஒன்று கடக்கும் போதெல்லாம்அவன் கண்களை இறுக முடிக் கொள்வான்அனேகமாக கண்களைத் திறக்கையில்கடந்திருக்கும்நேற்று ஏனோ அவன் கண் திறக்கையில் நடுவில் நின்று கொண்டுஅவனைப் பார்த்து நகைப்பது போன்றமுக பாவனையுடன்மீண்டும் கடந்து செல்கையில்அதன் பாதங்களை ஏதோ ஒருஅரூப …

>>

எல்.ரகோத்தமன்/இப்படியும் நடக்கும்

அந்தச் சிறுவன்பலமுறை முயன்றும்பம்பரம் சுற்றவில்லை!சுழலாத பம்பரங்களைபீரோவில் சேமித்துதன் பால்யகால நிழலோடு விளையாடிக்கொண்டிருந்தான்! அந்த வியாபாரிக்குமீசையே முளைக்கவில்லை!ஆனால் அவருக்குபானை நிறைய ஆசைவீரப்பன் மீசை மீது!அந்த மீசைகாட்டை ஆண்டது போல்தானும் ஆள ஆசை கொண்டான்! அவன்மழுங்கிய தன் அறுவாளைகூர் செய்ய ஒரு சாணையன்வருகையை நாடி …

>>

ஓடுதல்/வளவ. துரையன்

நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம். திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறேன்திரும்பினால் ஓடாதே என்பர்எப்படியும் வேகமாக ஓடிஎன்னை முந்திவிட எண்ணிஅவர்கள் ஓடுகிறார்கள். நான் ஓட வேண்டாமாம்ஏன் தெரியுமா? நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்நான் திணறித் திணறி ஓடுகிறேனாம் அவர்களைச் …

>>

அன்புடன் ஆர்க்கே.!/துளிகளின் கடல்..!

எந்த எதிர்பார்ப்புமில்லா அன்பினை என்மீது பொழிந்தபடி இருக்கிறீர்கள். தனுமை கமழும் வார்த்தைகள் உங்களால் என்னிடம் பரிமாறப்படுகிறது. துளித்துளியாக வாழ்வை மனதால் ரசிக்க சொல்லித் தருகிறீர்கள். புன்னகையையும் மகிழ்ச்சியையும் மட்டும் தேக்கிவைத்து வேண்டொணா துயர்களை புறந்தள்ளி துலக்கி விடுகிறீர்கள். என்னிதயம் சொல்ல நினைக்கும் …

>>

ரா. சீனிவாசன்/”வாழ்க்கை என்பது?”

உண்மையென்பதென்னவென்று நீ கேட்டாய்மேல் ஆகாயம்கீழ் பூமியென்றேன். அன்பு என்பது என்னவென்றாய்என்மேல் நீயும்உன்மேல் நானுமென்றேன். அறிவென்பது?நீ நீயென்றும்நான் நானென்றும், உணர்வது. துறவென்பதென்னவென்று? உன் கேள்வி,பற்றற்று போவதென்றேன். பிரிவு? கருணை? கோபம்? சோகம்?இன்பம் துன்பம்? நட்பு? காதல்?பொய்மைகள்பொய்மைகளென்றேன். பின், முழுமையென்பதென்னவென்றாய்உனை அறிவதென்றேன் சரி,வாழ்க்கை யென்பதென்ன?என்றாய்.என்ன …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 156

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 156 – வெள்ளி சிறப்பாக நடை பெற்றது – (05.06.2026) மாலை 6.30 மணிக்கு, 10 கதாசிரியர்கள்அவரவர் கதைகளை எடுத்துப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். Topic: Virutcham Meet …

>>

ராஜாமணி./ பெருந்தேவி எழுதிய “மழை நிற்கப்போவதில்லை”

கதையின் சுருக்கம். தொடர்ச்சியாகப் பெய்த பெருமழையினாலும் வெள்ளத்தினாலும் ஒரு கிராமமே மூழ்குகிறது. ஊரில் நூலகராகப் பணியாற்றும் சந்தானம், தன் வீடு வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியவுடன் தப்பிப் பிழைத்து, மலையின் உச்சியில் இருக்கும் ஒரு பழைய கிருஷ்ணர் கோயிலுக்கு வந்து சேர்கிறான். சளி, …

>>