
90 வயதுவரை
வாழ்ந்தவர் அப்பா
தனியாய் ஒரு அறையில் பல மாதங்கள் படுத்தே
கிடந்தார்
அடிக்கடி
என்னைக் கூப்பிடுவார்
இரவு நேரம்
கூப்பிடுவது அவர் வழக்கம்
என் கைகளைப்
பிடித்து
சிறிது நேரம்
தன் கைகளோடு
வைத்துக் கொள்வார்
அந்தப் பரிசமே போதும்
ஓராயிரம் அர்த்தம் சொல்லும்
