மரு. ச. கந்தசாமி/சிப்பிக்குள் முத்து

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொன்னாலும் சொன்னாங்க நாம் இந்தக் கடல் தாயை நம்பி தினமும் சிற்பி பொறுக்குககிறோம்” என்று மூன்று பேரும் புலம்பினர். ராக்காயி, மீனம்மா, பூவாயி மூன்று பேரும் ஊருக்குள் நிலம் நீர் காய்ந்து போக, தினமும் கடற்கரையோரம் சிற்பி பொறுக்கி ஏதோ 5, 10க்கு ஒருவேளை சோற்றுக்கு வழி தேடினர்.மூவரும் குடும்பமும் சுனாமியால் கடலுக்குள் செல்ல, அரை சாண் வயிற்றுக்கு இந்தப் பொழப்பு.மூவரில் ராக்காயி முதுமை தள்ள மூச்சரைத்தாலும், மற்றவர்கள் துணையாகச் செல்வது வழக்கம். ராக்காயி மற்ற 2 பேரிடம்” இந்தக் கடவுள் மனுஷன் தினம் இந்தச் சிப்பியை அள்ள வைத்தவன், தங்கம், வைரம் வேண்டாம், ஒரு முத்து உள் வைத்தாலே போதும், நம் சித்தம் மாறும்” எனப் புலம்பினாள்.அதற்கு மற்ற 2பேரும் “கடலை நம்பி மீனும், மீனை நம்பி நாமும் இருக்கையிலே, சிறப்பிக்குள் முத்து வேறு வேண்டுமா உனக்கு? என்றனர்.ராக்காயி திரும்பிப் போன கடலலையை வெறித்து நோக்கி அமைதியானாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன