கோபாலகிருஷ்ணன்/விபரீதம்

“லட்ச ரூபாய்க்கு ஆசைப் பட்டது விபரீதமாகப் போனதே “
ராணி கவலைப் பட்டாள்.
அவள் சினேகிதி ராஜி யின் கணவர் விஞ்ஞானி. மனிதனை மிருகமாக மாற்றும் மாத்திரை கண்டு பிடித்திருந்தார். மீண்டும் மனிதனாக மாற்றும் மாத்திரை ஆராய்ச்சியில்.
“லட்ச ரூபாய் தருகிறேன். அந்த மாத்திரையை உன் புருஷனுக்கு கொடுத்து விடு . ஒருவாரத்துக்கு அப்புறம் மாற்று மாத்திரை தரேன் “
பணத்துக்கு ஆசைப்பட்டு ராணி அப்படியே செய்தாள்.
விளைவு? கணவன் குரங்காக மாறிவிட்டான். வாழைப்பழம் வாங்கி கட்டுப்படி ஆகவில்லை. போதாக் குறைக்கு ராணிக்கு பிறாண்டல் வேறு.
ராஜியிடம் மாற்று மாத்திரை கேட்டாள். ராஜி ” சாரி. மாற்று மாத்திரை சோதனை தோல்வி. உன் புருஷன் குரங்காக இருக்க வேண்டியது தான் “என்று சொல்ல
“ஐயையோ என்ன நான் பண்ணுவேன் “
ராணி அழ ஆரம்பித்தாள்.
ராஜி “ஒண்ணு பண்ணலாம். உனக்கும் மாத்திரை தரேன். நீயும் குரங்காக மாறிடு. ஜோடியாகக் குட்டிக்கரணம் போடலாம் ” எ‌ன்று கிண்டல் பண்ண அவளை அடிக்கப் பாய்ந்தாள் ராணி.

One Comment on “கோபாலகிருஷ்ணன்/விபரீதம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன