அழகியசிங்கர்/நீலாவும் குரங்கும்

நீலா மாடிக்கு வரும்போது எப்போதும் பார்க்கும் அந்தக் குரங்கு கொடியில் சட்டையை மாட்டத் தயாராக இருந்தது.
இதைப் பார்த்த நீலா ஆச்சரியப்பட்டாள். குரங்கு எல்லா உதவிகளையும் செய்தன. வாளியில் இருந்த துணிகளைத் கொடியில் உலர்த்தின.
ஆச்சரியப்பட்டாள் நீலா. தெருவில் உள்ள எல்லாருக்கும் குரங்கின் செய்கையைக் காட்ட நினைத்தாள்.
குரங்கா இத்தனையும் செய்கிறது என்று பார்க்க ஆவலுடன் தெருவில் உள்ளவர்கள் நீலாவின் மொட்டை மாடிக்கு வந்தார்கள்.
அன்று குரங்கு மொட்டை மாடிக்கு வரவில்லை. அதன்பின் என்றுமே வரவில்லை.
நீலாவிற்கு ஏமாற்றம்.

One Comment on “அழகியசிங்கர்/நீலாவும் குரங்கும்”

Comments are closed.