
கண்ணாடி சில்லுகள் பதித்த
அந்த மதில் சுவரை
பூனை ஒன்று கடக்கும் போதெல்லாம்
அவன் கண்களை இறுக முடிக் கொள்வான்
அனேகமாக கண்களைத் திறக்கையில்
கடந்திருக்கும்
நேற்று ஏனோ அவன் கண் திறக்கையில் நடுவில் நின்று கொண்டு
அவனைப் பார்த்து நகைப்பது போன்ற
முக பாவனையுடன்
மீண்டும் கடந்து செல்கையில்
அதன் பாதங்களை ஏதோ ஒரு
அரூப கைகள் ஏந்தி கொள்வதாக
நினைத்திருந்தான்
இன்று சில்லுகளில் சில இரத்தகறைகளை
காணும் வரை
