
எனக்குக்.
கவிதை எழுத
வேண்டும்
காணும்
கேட்கும்
விஷயங்களை
எல்லாம்
கவிதையில்
சொல்ல வேண்டும்
என்ற பேரவா
சிலவகை
சொல் வடிவம்
பெறுகின்றன
பலவகை
சிந்தனையிலேயே
சிதைந்து
போகின்றன
எழுதாத
கவிதைகளே
மிகச் சிறந்த
கவிதைகளாம்
எழுதும் கவிதைகள்
என்ன
தவிட்டுப் பிள்ளையோ
நீங்கள்
என்ன பெயர்
சூட்டினாலும்
எனக்கென்ன
ஆயிற்று?!
என்னுள்ளே
கவிதைகள்
எப்போதும்
அடிமுடி
அறியா
எல்லையில்லாது
வளர்ந்து கொண்டே
செல்லும்
எறும்புப் படையாய்
புதிர்த் தோற்ற
எறும்புப் புற்றாய்!
16/06/26
மாலை மணி:06:04

வளரட்டும் உங்கள் கவிதை புற்று.
அருமை!
அருமை