
வழக்கம்போல் 3 பேர்களும் கடற்கரையில் வந்து கொண்டிருந்தார்கள்.
கடலை ஒட்டிய கிராமத்தில் அவர்களுக்குப் பணி. அதை முடித்துவிட்டு அவர்கள் இருப்பிடத்திற்கு வர வேண்டுமென்றால் கடற்கரையோடுதான் வர வேண்டும்.
வரும்போது கடற்கரையில் காணப்படும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டு வருவார்கள். அதை விற்று வரும் தொகையைச் சமமாகப் பங்கு கொள்வார்கள்.
அப்படி வரும்போது அவர்களில ஒருவருக்கு வைர நெக்லஸ் கிடைத்தது.
அதைப் பார்த்தவுடன் பயந்து விட்டாள் அதைக் கண்டுபிடித்தவள்.
போலீஸ் ஸ்டேஷன் போய்க் கொடுத்து விடலாமென்று தீர்மானித்தார்கள்.
அவர்கள் நேர்மையைப் பாராட்டிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களுடன் ஒரு ஸெல்பி எடுத்துக் கொண்டார். உரியவர்களிடம் நகைப் போய்ச் சேர்ந்தவுடன் அவர்கள் கொடுத்த பரிசை அவர்களால் மறக்க முடியாதது.

👌
நேர்மை என்றும் வெல்லும்:.
நல்ல குட்டி கதை சார்.