நேசத்தின் விலை / ஸ்ரீராம்

அதிசயமாக ஆசைப்பட்டு கடற்கரைக்கு வந்த பாவம், நேத்து ராத்திரி சுந்தரி தொலச்ச மோதிரத்தை இன்னிக்கு காலைல வேலைக்குப் போகும் முன்னால தேடி எடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையில் வந்து இருக்காங்க பானு சரசு சுந்தரி மூணு பேரும்.
” கவனமா இருந்திருக்கக் கூடாதா சுந்தரி இந்த மணல்ல எங்கன்னு தேட?”
“சிகப்பு கலர்ல பவழம் வச்ச மோதிரம்கா… பார்த்தா கண்ணுக்குப் பளிச்சுன்னு தெரியும், அதுவும் பகல்ல பார்த்தா நல்லா தெரியும்”
உற்றுப் பார்த்தபடி மணலை ரொம்ப அளையாமல் மேலோட்டமாகக் கைகளாலும் கண்களாலும் சலித்தபடி நடந்தார்கள் மூன்று பேரும்.
” எத்தனை ஆயிரம் இருக்கும் புள்ள மோதிரத்தோட விலை?” சரசு கேட்டாள்
” ஆயிரமா? ஐம்பது ரூபாயோ நூறு ரூபாயோ.. அவ்வளவுதான்” என்றாள் பானு.
சரசு நின்று விட்டாள்.
” கண்ணாலம் கட்டிக்கிட்டு வரச் சொல்ல மச்சான் போட்ட மோதிரம் கா! மாணிக்கம் என்ன விட்டுப் போய் நாலு வருஷமாவது! அவர் நினைப்பா வைத்திருக்கிறது இந்த மோதிரம் தான்க்கா” கண்கள் கலங்க தழுதழுத்த குழலில் சொன்ன சுந்தரி இன்னும் கவனத்துடன் தீவிரமாக மோதிரத்தை தேட ஆரம்பித்தாள்.

One Comment on “நேசத்தின் விலை / ஸ்ரீராம்”

Comments are closed.