ஷண்முக சுப்பையா/பூஜ்யம்

கணிதத்தில் நான் பூஜ்யம்.
குணத்தில் நான் நிர்குணன்.
மரங்களில் நான் அரசமரம்
மிருகங்களில் நான் பசு.
லோகங்களில் நான் இரும்பு.
படிகளில் நான் பதினெட்டாம் படி.
அடிகளில் நான் காலடி.
பானங்களில் நான் மதுபானம்.
வாகனங்களில் நான் சைக்கிள்.
வேதங்களில் நான் வேதாந்தம்.
வாதங்களில் நான் மௌனம்.
மலைகளில் நான் சபரிமலை.
கலைகளில் நான் விபசாரக் கலை.