ஷண்முக சுப்பையா/ஆவி

ஸர்வம் பிரம்மம்;
சத்தியம் அதுவே
எனவே உணர்ந்தே
பாலில் நீரெனக்
கலப்பாய் அதிலே.
கலந்தபின்
நின்று எரியும்
தீயில் காய்ச்சும்
பாலின் நீரென
ஆவியாய் பறப்பாய்