ஷண்முக சுப்பையா/மண்

விண்ணகமே
விண்ணகத்துச்
சந்திரனே
சூரியனே
எண்ணமிலா
தாரா பதங்களே!
மண்ணுக்காய்
விண் விண்ணென்று
வீணே
மண்ணைப்
புண்ணாக்கும்
மண்ணகத்தார்
மண்ணின் இருப்பிடமும்
விண்ணகத்தே தானென்று
ஏனோ எண்ணுகிலார்.