
- திரோபாவம்
(‘நமக்கு இந்த நிகழ்காலத்தைப் பற்றியே சரியாகத் தெரியாதே? இறந்த காலத்தைப் பற்றியும் அறிந்துகொண்டு ஏன் மேலும் துன்புற வேண்டும்?’)
கடவுள்ஐந்து தொழில்களைப் புரிகிறார். அவை முறையே படைத்தல், காத்தல், மறைத்தல், ஒடுக்குதல் (அழித்தல்) அருளுதல் ஆகும்.
இவற்றில் மறைத்தல் தொழிலே திரோபாவம் என்று கூறப்படுகிறது. இதனால் நம்முடைய முற்பிறவிகளைப் பற்றியும் இனி வரப்போகிற பிறவிகளைப் பற்றியும் நமக்குத் தெரியாதவாறு கடவுள் மறைத்திருக்கிறார். இது ஏன்? கடவுள் ஏன் நம்மைப் பற்றிய செய்திகளை மறைக்கவோ, மறக்கவோ செய்ய வேண்டும? அப்படிச் செய்யாமல் இருந்தால் நமக்கு நல்லதல்லவா? என்று பலரும் ே கருதுகின்றனர். இது தவறான எண்ணம் என்று பகவான் விளக்கி கூறியதாவது:
கடவுள் தயாமூர்த்தியாதலால் மனிதர்களி டமிருந்து முற்பிறவி அறிவை மறைத்தருளினார். நாம் முற்பிறவியில் நல்லவர்களாக இருந்திருந்தால் இப்பிறவியில் கர்வம் ஏற்படும்; தீயவர்களாய் இருந்திருந்தால் தாழ்வு மனப்பான்மை, வருத்தம முதலியன ஏற்படும்.’
‘நமக்கு இந்த நிகழ்காலத்தைப் பற்றியே சரியாகத் தெரியாதே? இறந்த காலத்தைப் பற்றியும் அறிந்து கொண்டு ஏன் மேலும் துன்புற வேண்டும்?
‘உறக்கம் உயிர்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. உறக்கம் இல்லையாயின் வாழ்க்கை சீக்கிரமே சகிக்க முடியாததாகி விடும். இதைப் போலவே கடவுளது திரோபாவம் என்ற மறைக்கும் தொழிலும் ஆகும்.
கடவுளின் பிறதொழில்களான படைத்தல், காத்தல், ஒடுக்குதல், அருளுதல் ஆகியவை போன்றே இதுவும் முக்கியமானதாகும்; நல்லதே ஆகும்.
