
நான் இன்னமும்
நம்பிக்கை இழக்கவில்லை
ஆயின் நம்மைச் சுற்றி
நச்சுப்புகை அதிகமாகி விட்டது
நம்முடைய குறிக்கோள்கள்
சிதைந்து போவதை நாம் உணர்கிறோம்
வெற்று நம்பிக்கை ஞானம் அல்ல
வெவ்வேறு வேஷங்களின் வெறுமை
துல்லியமாகவே புலனாகிறது
உயர்ந்த மலையும், பரந்த கடலும்
மனித ஜாதியின் நிலையாமையை
சுட்டிக் காட்டுகின்றன
ஒரு மகா மனிதனின் வருகையை
எதிர் நோக்கி நிற்பவையும் அவையே
அந்த மகர் மனிதன் நான் இல்லை
நான் சரித்திரம் சமைக்க
வந்தவனில்லை
வரலாற்றை வகைப்படுத்தி
முடியுமானால் என் வழிக்குக்
கொணர முயல்பவன்
எனக்கு வாழ்க்கை புரியத் தொடங்கி விட்டது
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)
