ரியோகன் கவிதை

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன்

அழகு இருக்குமிடத்தில் அவலட்சணமும் காணப்படும்;
சரி என்றால் அங்கே தவறும்
இருக்கவே செய்யும்.
அறிவும் அறியாமையும் ஒன்றையொன்று
இட்டு நிரப்பிக்கொள்ளும்,
மேலும் மாயையையும்
ஞானத்தையும் பிரிக்க முடியாது.
இது பழைய உண்மை
இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது என்று எண்ணவேண்டாம்.
“எனக்கு இது வேண்டும்,
எனக்கு அது வேண்டும்” என்பது
அறிவீனத்தை தவிர வேறில்லை.
நான் உங்களுக்கு ஒரு ரகசியத்தை பகிர்கிறேன் –
அனைத்தும் நிலையற்றவை!