
ஒரு உரத்த வெயிலில்
உடல்.. சூடு தாங்காமல்
மர நிழலை
தேடி நிற்கிறது..
ஒரு கனத்த மழையில்
உடல்..குளிரில் நடுங்கி
கட்டிட அடியில்
ஒதுங்கி நிற்கிறது!
இந்த இயற்கையை
எளிதாய் புரிந்து விட்ட உடம்பு
வெயிலையும் மழையையும்
இயல்பாகவே பார்க்கிறது!
இரண்டுக்குமே
வானம் தான் பொறுப்பு..
இரண்டையுமே
உடல்தான் ஏற்பு!
அது ஏனோ தெரியவில்லை..
இந்த மனசு மட்டும்..
வெயிலோடு பேசுவதைப் போல
மழையோடு பேசுவதே இல்லை!
நிலவைக் கொண்டாடுவது போல்
சூரியனைக் கொண்டாடுவதில்லை..
இரண்டுமே
வானத்தின் பிள்ளைகள் தானே!
