
பிள்ளை
நடக்கவே படிக்காமல் போச்சா
நடை வண்டி இல்லாத
வீட்டில்
அம்மா விரல்
முந்தானை மூட்டை ரத்தம்
புரட்டி வைத்த
கை நாட்டுச் சுவர்
மரப் பெஞ்சு பீரோ
உண்டு சுற்றிவர
முட்டியிலே தழும்பும்
காலிருக்கும் பிள்ளை யெல்லாம்
நடந்து தீரும்
நடை வண்டிக்காக
நடை
காத்திருக்கா
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)
