விஞ்ஞானி/வானிலை அறிக்கை

:


வானில் ஒரு வெண்மேகம்
வேடிக்கை பார்க்க

சூரியனோடு சேர்த்து
பனித்துளியை பருகி
பறந்ததொரு தேன்சிட்டு.

மகரந்தத்தை சுமக்க
கூலியாய் தேனை
பெற்றுச்சென்றது வண்டு

உச்சி மரக்கிளை அமர்ந்து
எண் திசையும் வான் நோக்கி பார்த்திருந்தது காக்கை

மீண்டும் உணவை சுமந்தபடி
தம் புற்றுக்கு சாரிசாரியாக
திரும்பி போயின எறும்புகள்.

தெருவில் அங்கும் இங்கும்
ஓடிக்கொண்டிருந்தது நாய்

குரங்கு குல்லா கம்பளி ஆடை
சகிதம் நடைபயிற்சி செய்து
கொண்டு இருந்தார் ஒருவர்

ஒரு வீட்டுக்குள் இருந்து
தொலைக்காட்சி செய்தி
மழைக்கான எச்சரிக்கையை
வண்ண வண்ண மயமாய்
விடுத்துக் கொண்டிருந்தது

ஒரு நிமிடம் நின்று உள்ளே
எட்டிப் பார்த்த நாய் மீண்டும்
தன் நிழலை இழுத்துக்கொண்டு
தெருவில் ஓடலானது

()