“மகாகவி பாரதி”/மீ. விசுவநாதன்

அவனொரு காலக் கண்ணாடி
அவனொரு தேசப் பெருஞ்சோதி
அவனொரு ஞானப் பேரின்பம்
அவனொரு அன்புத் தமிழ்ச்சுரங்கம்
அவன்தரு கவிதை இன்பத்தேன்
அவன்கலை மாதா கைவீணை
அவன்திருக் கூட்டம் நாமெல்லாம்
அவன்திருப் பேர்தான் பாரதியாம்.

(இன்று(11.12.2024) மகாகவியின் பிறந்த தினம்)