விஞ்ஞானி/சிறப்பு விருந்தினர்

அந்த காக்கா தினமும்
சன்னலின் வழியே
குரல் கொடுக்கும்.

வைக்கும் உணவை
தின்று விட்டு செல்லும்

அன்று அது வரவில்லை
வராது என்பது தெரியும்
அது அன்றைய தினத்தின்
சிறப்பு விருந்தினர்

பல வீட்டு மாடிகளில்
மனிதர்கள் கா கா என்று
கத்திக்கொண்டிருந்தனர்.