
அவள்
நீங்கள் எங்கே போகிறீர்கள்
என்று கேட்டாள்!
என் வயது
இருபத்தெட்டு என்றேன்!
அவன்
நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்
என்று கேட்டான்!
அவள்
நாளை ஊருக்குப்
போவதாகச் சொன்னாள்!
அவன்
அந்த பூங்காவில்
சந்நிக்கலாமா என்றான்!
அவள்
தன் தந்தை வெளீயூர்
சென்றிருப்பதாகச் சொன்னாள்!
அவன்
எனக்கு ரஜினி படம்
மிகவும் பிடிக்கும் என்றான்!
அவள்
எனக்கு ஊர் சுற்றுவதில்
அலாதி ஆசை என்றாள்!
அவன்
நான் முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றவன் என்றான்!
அவனும் அவளும்
இப்படி சொதப்பலாகவே
காதலித்த காதல்
சொதப்பலாகவே
மணமுறிவில் முடிந்தது!
நாட்டில் நடக்கும்
எத்தனையோ கூத்துகளில்
இதுவும் ஒன்று!
