வசந்ததீபன்

உன் முகம்
பிங்க் வண்ணக் கண்ணாடி..
உன் கூந்தல்
கருமணல் புயல்..
உன் இமைகள்
எருக்கம் பூ பஞ்சுகள்..
உன் கண்கள்
வெண் கருமை மீன்கள்..
உன் உதடுகள்
படபடக்கும் பட்டாம்பூச்சிகள்..
உன் நாசி
தாழம்பூவின் மடல்..
உன் செவிகள்
சித்தகத்திப் பூக்கள்..
உன் பற்கள்
தென்னம்பாளைச் சரங்கள்..
உன் கைகள்
மூங்கில் குருத்துகள்..
உன் விரல்கள்
பனங்கிழங்குகள்..
உன் உள்ளங்கைகள்
தேனடைகள்..
உன் இடை
உடுக்கையின் நடுப்பாகம்..
உன் கால்கள்
தாமரைத் தண்டுகள்..
உன் தொடைகள்
கோபுரம் தாங்கும்
மெலிந்த தூண்கள்..
உன் நகங்கள்
கனகாம்பர மொட்டுகள்..
உன் பாதங்கள்
பாலாடை அடுக்குகள்..
உன் கால் விரல்கள்
சலங்கைமணிகள்..
பசுங்கொடியாய் என்னை
பற்றிப் படருகிறாய்…
கனவுக்குள் சிக்கித் திணறுகிறேன் நான்.
